உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலாச்சாரத்தை படுகொலை செய்ய முயற்சி: கவர்னர் ரவி தாக்கு governor R.N.Ravi madurai College ponmudi

கலாச்சாரத்தை படுகொலை செய்ய முயற்சி: கவர்னர் ரவி தாக்கு governor R.N.Ravi madurai College ponmudi

கல்விக்கூடங்களில் கம்பன் எனும் தலைப்பில் நடந்த மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கவர்னர் ரவி பரிசுகளை வழங்கி பேசினார். பெண்களைப் பற்றியும், சைவம், வைணவம் பற்றியும் அமைச்சர் பொன்முடி மிகவும் இழிவாக பேசிய கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இப்போதுள்ள அரசில் உயர் பதவி வகிக்கக்கூடிய ஒரு நபர் பெண்களை எவ்வளவு தரக்குறைவாக பேசினார் என்பதை பார்த்தோம். பெண்களை மட்டும் அவர் விமர்சிக்கவில்லை. சிவனையும், விஷ்ணுவையும் வழிபடும் பக்தர்களின் உணர்வுகளை காலில்.போட்டு மிதித்துள்ளார். தமிழகத்தில் கலாச்சார படுகொலை செய்யவும் தமிழர் பெருமைகளை சீர்குலைக்கவும் 70, 80 ஆண்டுகளாக திட்டமிட்டு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் ஆதரவுடன் இந்த முயற்சி நடக்கிறது. அந்த இயக்கத்தில் ஒருவர்தான் இந்த கனவான் என பொன்முடியை கடுமையாக சாடினார் கவர்னர் ரவி. சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா, டெங்குவோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். அழிப்போம் என்கிறார்கள். கலாச்சார பெருமையை போற்றும் பெண்களை உயர்வாக மதிக்கும் இந்த தமிழ் மண்ணில் இதுபோன்ற அநாகரிக பேச்சுகளுக்கு இடமில்லை; இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கவர்னர் கூறினார்.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை