உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ கூட்டணிக்கு மக்கள் எப்படி ஓட்டு போட்டாங்க? BJP| Congress| Shiv Sena| Uddhav

பாஜ கூட்டணிக்கு மக்கள் எப்படி ஓட்டு போட்டாங்க? BJP| Congress| Shiv Sena| Uddhav

பாஜ கூட்டணிக்கு மக்கள் எப்படி ஓட்டு போட்டாங்க? BJP| Congress| Shiv Sena| Uddhav | Maharashtra election result மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜ - 128 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா ஷிண்டே பிரிவு 54 மற்றும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பிரிவு 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ந்த வகையில் பாஜ கூட்டணி 218 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 19, சிவசேனா உத்தவ் பிரிவு, 19 மற்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 12 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அந்த வகையில் இண்டி கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில் பிற கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை கடந்து பாஜ கூட்டணி முன்னிலை வகிப்பதால், அந்த கூட்டணி ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத், தேர்தல் முடிவகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மக்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. மகாராஷ்டிரா மக்களின் மனநிலை எங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தலில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது. மகளிருக்கான செல்ல சகோதரி நிதி உதவி திட்டத்தால் பாஜ கூட்டணிக்கு ஓட்டு கிடைத்தது என சொல்ல முடியாது. இங்கு தந்தை, தாத்தா, மகன் என அனைவரும் செல்லமானவர்கள்தான். அவர்களின் ஓட்டுகள் என்னவாயிற்று? பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜ கூட்டணி அரசு மக்களுக்கு என்ன செய்தது? இந்த முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல. அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என சஞ்சய் ராவத் கூறினார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !