/ தினமலர் டிவி
/ பொது
/ லோக்சபாவில் பிரதமர் மோடி மீது சீறிய ராகுல் Rahul Speech at Parilament| BJP Chakra Vyug| Congress
லோக்சபாவில் பிரதமர் மோடி மீது சீறிய ராகுல் Rahul Speech at Parilament| BJP Chakra Vyug| Congress
லோக்சபாவில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். மகாபாரதத்தில் சக்ரவியூகம் அமைத்து அபிமன்யுவை ஆறு பேர் சேர்ந்து தாக்கி கொன்றனர். அது போல், பாஜவின் சக்ர வியூகம் நாட்டை சூழ்ந்துள்ளது. இதில், நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், சிறு தொழில்புரிவோர் சிக்கி தவிக்கின்றனர். சக்ர வியூகத்திற்கு பத்ம வியூகம் என இன்னொரு பெயரும் உண்டு. பத்மம் எனப்படும் தாமரை தான் பாஜவின் சின்னம். அதை தான் பிரதமர் மோடி தன் சட்டையில் அணிந்துள்ளார்.
ஜூலை 29, 2024