உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நீட் மறுத்தேர்வு நடத்துவது தேவையற்றது: NTA பதில் | NTA | Supreme Court | NEET

நீட் மறுத்தேர்வு நடத்துவது தேவையற்றது: NTA பதில் | NTA | Supreme Court | NEET

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததால், மறு தேர்வு நடத்த உத்தர வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியது. வினாத்தாள் கசிவால் பயனடைந்தவர்கள் யார், முறைகேடு தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது தொடர்பாக NTA எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத்தின் கோத்ரா, மற்றும் பாட்னாவின் சில மையங்களில் முறைகேடு நடந்தது தொடர்பாக, அந்த மையங்களில் தேர்வு எழுதிய அனைவரின் விடைத்தாள்களை NTA மதிப்பாய்வு செய்தது. வினாத்தாள் கசிவு, தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா? என்பதை அறிய இந்த மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆனால், தனி நபர்கள் செய்த முறைகேடுகள் முழு தேர்வின் புனித்தன்மையை பாதிக்கவில்லை என்பது தெரிகிறது. ரகசியத்தன்மை மீறும் வகையில் பெரிய அளவிலான முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையில்லாதது. தேர்வை ரத்து செய்வதால் நேர்மையாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்கான வினாக்களை NTA அலுவலகத்தில் நிபுணர்கள் தயார் செய்வர். எந்த கேள்விகள் வினாத்தாளில் இடம் பெறும் என்பது அவர்களுக்கே தெரியாது. நீட் வினாத்தாள் கசிவு பற்றி சிபிஐ விசாரிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை