டிரம்பை சுடும் முன்பும் பின்பும் நடந்த திக் திக் சம்பவம் | Trump rally shooting | Pennsylvania Rally
டிரம்பை சுட்ட ஆசாமியை போட்டுத்தள்ளியது எப்படி? அடுத்த வீடியோ வைரல் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பிரசார கூட்டத்தில் வைத்து சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் டிரம்பின் வலது காது கிழிந்தது. அவரது பக்கத்தில் இருந்த ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் உயிருக்கு போராடுகிறார். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட ஆசாமியை மறுகணமே ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். அமெரிக்கா மட்டும் இன்றி மொத்த உலகத்தையும் உலுக்கிய இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியது: பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடந்த குடியரசு கட்சி பிரசார கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசிக்கொண்டு இருந்தார். டிரம்ப் மேடைக்கு பின்னால், முன்னால், பக்கவாட்டில் என அனைத்து பகுதியிலும் கட்சியினர் திரண்டு இருந்தனர். சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. secret service sniper என்று சொல்லப்படும் பாதுகாப்பு வீரர்களும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி தான் டிரம்பை குறி பார்த்து சுட்டு இருக்கிறான் ஆசாமி. டிரம்ப் மேடைக்கு எதிர்புறம் இருந்த கட்டடத்தின் கூரை மீது ஆசாமி பதுங்கி இருந்தான்.