உள்ளூர் செய்திகள்

மனம் கொத்தி பறவை

சென்னை முதியோர்களுக்கான தேவை எதுவாயினும் தேடி வந்து நிறைவேற்றித் தர துவக்கப்பட்டது... 'ஓகே பாஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்.இந்த வார மனம் கொத்தி: ஷோபா அல்லாடிஅடையாளம்: ஓகே பாஸ்இருப்பிடம்: ஆழ்வார்பேட்டை, சென்னை. தான் துபாயில் வசித்த நாட்களில், சென்னையில் இருந்த பெற்றோர் மற்றும் மாமனார் - மாமியார் தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சிரமப்பட்டதை உணர்ந்திருக்கிறார் ஷோபா. 2019ல் சென்னை திரும்பியதும், 20 ஆண்டு கால வங்கி பணி அனுபவத்தை ஓரமாய் வைத்துவிட்டு தொழில் துவக்க சிந்தித்திருக்கிறார். உணவு, பயணம், வீட்டு வேலைகள் உள்ளிட்ட முதியோர்களின் அத்தனை தேவைக்கும் சேவையாற்றுவது போன்ற ஒருங்கிணைந்த ஒரு திட்டம்; 'ஓகே பாஸ்' உதயமாகிறது! அன்றைய சவால்கள்'கொரோனா தாக்கம் அதிகமா இருந்த 2020 ஜூலை மாதத்துல என்னோட இந்த 'ஸ்டார்ட் அப்' பயணம் ஆரம்பிச்சது. மருத்துவமனைகள்ல இருந்தவங்களுக்கு அவங்க வீடுகள்ல இருந்து உணவுகள் வாங்கிட்டுப் போய் கொடுக்க ஆரம்பிச்சோம்!'மூத்த குடிமக்களுக்கான சேவைக்கானதா 'ஓகே பாஸ்' இருந்தாலும், அப்போ எல்லா வயதினருக்குமே எங்க சேவை தேவைப்பட்டது! இப்போ, வெளிநாட்டுல இருக்குற மகன் எங்க மூலமா தன் அப்பாவை கவனிச்சுக்கிறார். 'சுயதொழில்' பெண்கள் எங்க மூலமா பொருட்களை விநியோகம் பண்றாங்க. 'பைலை வீட்டுல மறந்து வைச்சிட்டு வந்துட்டேன்'னு எல்லாம் இப்போ எங்களுக்கு அழைப்பு வருது!' என்கிறார் ஷோபா. டாஸ்கர்தன் 'ஸ்டார்ட் அப்' களப்பணியாளர்களை 'டாஸ்கர்' என்று அடையாளப்படுத்தும் ஷோபாவின் அலுவலகத்தில் 8 பணியாளர்கள்; ஒப்பந்த அடிப்படையில் களப்பணியாற்ற 50 பேர். அத்தியாவசிய சூழலில் ஞாயிறன்றும் சேவை தருகிறது ஓகே பாஸ்; சமூக வலைதளங்கள், அபார்ட்மென்ட் நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்களே இதன் விளம்பர துாதர்கள்! 'ஸ்டார்ட் அப்'பின் வெற்றிக்கு அடிப்படை என்ன ஷோபா?அதீத பொறுமை; கடந்த நான்கு ஆண்டுகள்ல நிதி நெருக்கடிகளை நான் சந்திச்சிருந்தாலும் மூடுவிழா நடத்துறது பற்றி நான் யோசிச்சதே இல்லை. ஊழியர்களுக்கான ஊதியத்தை தாமதம் ஆக்கினதில்லை. இந்த பொறுமையும், ஊதியத்துக்கான நிதியும் வெற்றிக்கு போதும்னு நினைக்கிறேன். மனதில் இருந்து...'வீட்டுல தனியா இருந்த அப்பா என் போன் அழைப்பை ஏற்கலைன்னதும் பயந்துட்டேன். 'ஓகே பாஸ்'க்கு தகவல் சொன்னேன். வீடு தேடிப் போனவங்க, அப்பாவை என்கூட பேச வைச்சிட்டாங்க!' - கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்.63856 02677www.okboss.co


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !