உள்ளூர் செய்திகள்

மனம் கொத்தி பறவை

'ஒரு நாளைக்கு 20 நிமிடம்; வாசித்தல்ல... வாசிப்பதை கேட்டு ஞானம் பெறலாம்' என்கிறது 'மேஜிக் 20' தமிழ் ஆடியோ புத்தக செயலி! அடையாளம்: மேஜிக் 20இருப்பிடம்: அமைந்தகரை, சென்னை.இதன் நிறுவனர் அருண்பாரதிக்கு மே, 2022ல் உதித்த யோசனை இது; தனது பொறியியல் அறிவு மற்றும் ஊடக அனுபவத்தால் 'ஸ்டார்ட் அப்' வணிகமாக இதனை முன்னெடுத்து இருக்கிறார் கார்த்திகேயன்; இவர், 'மேஜிக் 20' நிறுவனத்தின் இணை நிறுவனர்; இவருடன்... மற்றுமொரு இணை நிறுவனராக பாலாஜி. என்ன 'மேஜிக்' பண்றீங்க; அதென்ன 20?'ஏதோவொரு புத்தகத்துல இருக்குற ஏதோவொரு வார்த்தை உனக்குள்ளே மேஜிக் நிகழ்த்தும்'ங்கிற உண்மையை 'ஸ்மார்ட் போனும் கையுமா சுத்திட்டு இருக்குற இளைய தலைமுறைக்கு சொல்ல நினைச்சோம்! இருபது ஓவர் கிரிக்கெட் வேகத்துக்கு ஈடுகொடுக் கணும்னு, ஒரு புத்தகத்துல இருக்குற சத்தான விஷயங்களை 20 நிமிட ஒலிப்பதிவா உருவாக்கினோம். சுடச்சுட 'மேஜிக் தமிழ் - தினமும் 20 நிமிடங்கள்' லோகோ தயாராக, 'படிக்க நேரம் இல்லையா; அப்போ... கேளுங்க'ங்கிற வாசகத்தோட, சில லட்சங்கள் முதலீட்டுல ஜூன், 2023ல் செயலி உருவாக்கினோம்! செப்டம்பர் 2023; தமிழக அரசோட 'ஸ்டார்ட் அப் திருவிழா' மூலமா பெரிய முதலீட்டாளர்கள் நிதி நீட்டினாங்க! 'மேஜிக் 20'ல் சினிமா, அரசியல், புதினங்கள் கிடையாது. தலைமைத்துவம், சுயசரிதை, நிதி - முதலீடு, சுயஉதவி, பெண்கள் அதிகாரம், தொழில்முனைவு, உளவியல், வணிகம் - சந்தைப்படுத்துதல், தன்னம்பிக்கை சார்ந்து 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களது படைப்புகளும், 400க்கும் மேற்பட்ட சிறந்த பன்னாட்டு படைப்புகளும் தேன் தமிழில் கேட்க கிடைக்கின்றன! செப்., 2024ல் மத்திய அரசின் 'நிதி - எஸ்எஸ்எஸ்' திட்டத்தின் கீழ், தன் வளர்ச்சிக்குரிய முதலீட்டை 'மேஜிக் 20' பெற்றுள்ளது! எந்த இலக்கு நோக்கி இந்த பயணம்?ஆழமான படைப்பு, துல்லியமான மொழிபெயர்ப்பு, பரிச்சயமான குரல்ல தெளிவான உச்சரிப்பு, இப்படி பதிவாகுற அர்த்தமுள்ள ஒலி வடிவங்களை, 'கூகுள் ப்ளே ஸ்டோர்'ல கிடைக்குற எங்க செயலிதருது. கூடிய சீக்கிரம் தென்னிந்திய மொழிகள்ல இதை கொண்டு வரணும்ங்கிறது எங்க கனவு! 'ஆப்பிள்' ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை, 'அமேசான்' ஜெப் பெசோஸ்சாதனை, 'பெப்சி' இந்திரா நுாயி போராட்டங்கள் என, தங்கள் சந்தாதாரர்களுக்கு'மேஜிக் 20' தரும் ஒலி அனுபவம் அலாதியானது. 91769 63399மனதில் இருந்து...'புத்தக வாசிப்புங்கிறது மன ஆரோக்கியத்துக்கான அத்தியாவசியமான கடமைன்னு உணர வைக்குது மேஜிக் 20; வெறும் இருபது நிமிடங்கள்ல ஒரு புது உலகத்துக்குள்ளே பயணம் பண்ணிட்டு திரும்புற உணர்வு; செம... செம...!'- வீ.சரவணன், மென்பொறியாளர், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !