முதல்வரே... ஒரு நிமிஷம்!
கால் பறித்த திராவிட அரசுசெய்தி: திராவி ட அ ரசுகளின் அலட்சியத்தால் பலரது வாழ்க்கையை அழித்த போலி மருத்துவர் அநீதி: தவறான சிகிச்சையால் இடது காலை இழந்து உரிய நிவாரணம் கிடைக்காது தவிக்கும் பெண் முதல்வரே... திராவிட ஆட்சியாளர்களின் சாதனையாக சொல்லப்பட்ட நிர்வாக அலங் கோலத்தில் ஒன்று... போலி மருத்துவர்கள் கைது; இப்படியான செய்திகளை அன்று எங்களில் ஒருவராக நீங்களும் அறிந்திருப்பீர்கள்! அந்நிகழ்வுகளுக்குப் பின், அம்மருத்துவர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அரசுகள் எந்த ஒரு அக்கறையையும் காட்டியதில்லை; நான் சொல் லும் இந்த உண்மைக்கு சாட்சி... நானேதான்! நான் உமா மகேஸ்வரி; வயது, 39; அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மகள்; கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயிலும் மகனோடு, திண்டுக்கல் நத்தம் பகுதியில் வசிக்கிறேன். உடல்நலக் குறைவால் கடந்த 2020ல் கணவர் இறந்துவிட, தையல் தொழில் செய்து பிழைத்து வந்தேன்! டிசம்பர், 2021ல் சாதா ரண காய்ச்சல் பாதிப்பிற்காக எனக்கு பரிச்சயப்பட்ட கிளினிக்கை அணுகியபோது, அங்கிருந்த மருத்துவர் ஊசி போட்டார். ஓரிருநாளில் என் இடதுபக்க இடுப்பு பகுதி புண்ணாகி நீர் கோர்த்தது. பிப்ரவரி, 2022ல் 'அறுவை சிகிச்சை' மூலம் எனது இடது கால் அகற்றப்பட்டது. ஜூலை, 2023ல், திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனரின் ஆய்வில் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சிக்கும்வரை அவர் 'போலி மருத்துவர்' என்பது எனக்குத் தெரியாது. இத்தனைக்கும், 2015ம் ஆண்டு ஆய்விலேயே அவர் சிக்கி தலைமறைவான நிலையில், அவரை கண்டு பிடித்து தண்டனை தரும் முயற்சியில் அரசு கோட்டை விட்டிருக்கிறது. அண்ணா... நிகழ்ந்த கொடுமைக்கான நீதி... மாற்றுத்திறனாளி உதவித் தொகையா; ஒற்றைக்காலில் தையல் இயந்திரத்தை இயக்கி பிழைக்கும் எனக்கு ஒரு சகோதரனாக நீங்கள் நீதி வழங்க மாட் டீர்களா?