உள்ளூர் செய்திகள்

ஏழரை கேள்விகள்

'காசா குழந்தைகளின் அழுகுரல் நெஞ்சை பதறச் செய்கிறது' என உருகிய எங்கள் முதல்வரே... 'தமிழக அரசின் அலட்சிய ஆய்வுகளால் 20க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் இருமல் மருந்திற்கு பலியானதற்கும் துடித்திருப்பீர்கள்' என்று நம்புகிறோம். சரி... சோகம் துடைத்து இதற்கு பதில் சொல்லுங்கள் ... 1. வடிகால் இருந்தும் மழைநீர் தேக்கம் - காரணம்... அதீத மழைப்பொழிவு; தெருநாய் தொல்லை - காரணம்... விலங்குநல ஆர்வலர்கள்; போலீஸ் இருந்தும் கூட்ட நெரிசலில் மக்கள் பலி - காரணம்... ஜோசப் விஜய்; எங்கள் புரிதல் சரிதானே? 2. 'தாயுமானவர், அன்பு கரங்கள் திட்டத்தில் பலன் அடையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அவலமான வறுமை நிலைக்கு 'டாஸ்மாக்' முக்கிய காரணம்' எனத் தெரிந்தால், 'அப்பா'வாகிய நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? 3. 'முன்னாள் முதல்வர் கருணாநிதி வடிவமைத்த நவீன தமிழகத்தின் இளைஞர்கள் இப்படி இருக்கிறார்களே... இது என்னவிதமான வடிவமைப்பு' என்று நடிகரை ஆராதிக்கும் கூட்டத்தைப் பார்த்து நாங்கள் கலங்குகிறோம்; நீங்கள்? 4. பலவிதங்களில் உதவித்தொகையாக ரூ.1,000 பெறும் 'தகுதி'யோடு நம் மக்கள் இருக்கும் சூழலில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 30 ஆயிரம் இடங்கள் நிரம்பாமலும், தனியார் கல்லுாரிகள் நிரம்பித் ததும்புவதும் எப்படி? 5. வெடிகுண்டு மிரட்டல்களுக்கு சோதனை நடத்துவது வழக்கம் என்றாலும், 24/7 கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் உங்கள் இல்லத்திற்கு எதற்காக சோதனை; நம் காவல் துறையின் கண்காணிப்பு பணி உரசிப் பார்க்கப்பட வேண்டியதா? 6. தி.மு.க.,வை வளர்க்கும் இளைஞரணி நிர்வாகிகள் திறமை அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகையில், மாநில நலன் வளர்க்கும் அரசுப்பதவி தேர்வில் ஜாதி அடிப்படையிலான சலுகைகள் இன்னும் நீடிக்க வேண்டுமா? 7. 'கடவுள் இல்லை... இல்லவே இல்லை என ஸ்ரீரங்கத்து ஈ.வெ.ரா., சிலை குறிப்பிடுவது எந்த மதத்தின் கடவுளை' என்று த.வெ.க., தலைவர் ஜோசப் விஜயிடம் இனிமேலாவது கரூர் மக்கள் கேட்கக்கூடும் என்று நம்புகிறீர்களா? 7 ½ கருணாநிதி இருந்திருப்பின் காளான் முளைத்திருக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !