உள்ளூர் செய்திகள்

ஏழரை கேள்விகள்

ஆகாஷ் எனும் நான்... 'நான் அவசரமாய் போக வேண்டும்; என்னை ஏன் மறிக்கிறீர்கள்' என ஆவேசமாய் கேட்டால், 'கதாநாயகன் திரையில் பேசுவது போல் இவன் பேசுகிறானே' என ஊர் மெச்சுமென்று நினைத்தாயா ஆகாஷ்; இல்லை, அன்றைய சம்பவத்திற்கு முன் கீழ்கண்ட சிந்தனைகள் ததும்ப நீ கனன்று கொண்டிருந்தாயா? 1. 'பா.ஜ.,வின் வெறுப்பு அரசியலால் எங்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் ஏற்படுகிறது' என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்; 'காங்கிரஸில் மூத்த தலைவரான கார் கேவின் நிலை என்ன' என்பதை உண ராத தற்குறியா தமிழன்? 2. சுதந்திரதின பொதுவிருந்தில் மக்களுடன் அமைச்சர்கள் உணவருந்துவதை பலமுறை பார்த்திருக்கும் தமிழகம், பல கோவில்களின் அன்றாட அன்னதானத்தில் அமைச்சர்கள் அடிக்கடி பங்கேற்று உண்பதை காண விரும்புகிறது; இம்மாற்றம் நிகழுமா? 3. 'ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான முதலீடு, 1.20 லட்சம் பணிவாய்ப்புகள்' என முன்னவர்கள் போலவே சொல்வது என்னவிதமான மாற்றம்; வேலைவாய்ப்புகள் நிஜமாகும் நாள் விபரம் எப்போது? 4. 'நீங்கள் கோபமாக பேசாதீர்கள்; அமருங்கள்' எனும் சபாநாயகரின் கண்டிப்பை பார்க்க முடிகிறதே தவிர, சத்தமாக பேசியவரின் முக உணர்வை பார்க்க முடிய வில்லை; இத்தகைய 'நேரலை' எவ்வகையில் 'வெளிப்படைத் தன்மை' என்றாகும்? 5. 'கரூர் சம்பவத்திற்கு காரணம் சதியா, அலட்சிய அணுகுமுறையா' என தெளிவுறாத நிலையில், பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசுப்பணி; சரி... 'கொரோனா' கால பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நீதி வழங்கும் தேதி? 6. 'ஊழலை சிறிதும் சகித்துக் கொள்ளாத மன நிலையை மக்கள் கொண்டிருக்க வேண்டும்' என, சுதந்திர தினத்தன்று முழக்கமிட்ட நம் முதல்வர், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சொன்ன 'கமிஷன்' புகார்கள் பற்றி அவரிடம் விசாரித்திருப்பாரா? 7. 'பொதுவாழ்வில் சமரசமில்லை; ஆட்சி யாளர்களான மக்கள் நலனே முக்கியம்; அரசு ஊழியர்களான நாம் மக்கள் சேவகர்கள்' எனச்சொல்லும் முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சியில் சாலை மறியலா; கண்ணாடி மாளிகையில் கல் வீச்சா; ஏய்ய்ய்... யார் நீங்கள்? 7 ½ 'சகிப்புத்தன்மை' - பலவீனமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !