உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்

காலத்தால் கரைக்க முடியா அழகில் கொற்றவை! காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் வட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் சிவபுரம்; இந்த குக்கிரா மத்தில்... 'ராஜராஜேஸ் வரமுடைய மகாதேவர்' கற்கோவில்; இதனுள், எழில்மிகு கொற்றவை! 'உரோடகம்' எனும் ஊர் பெயர் 'சிவபுரம்' ஆனதை யும், முதலாம் ராஜராஜ சோழனது ஆட்சியில் கோவில் கட்டப்பட்டதை யும் தமிழக தொல்லியல் துறையின் அ றிவிப்பு பலகை சொல்கிறது! 'முழங்கால், இடுப்பு, கழுத்துப் பகுதி களில் வசீகர வளைவுகள் கொண்ட 'திரி பங்க நிலை'யில் அர்த்தமண்டப வடக்கு தேவகோட்டத்தில் நிற்கும் இக்கொற்ற வையின் வலது மேல் கரத்தில் சக்கரம்; வலது கீழ் கரத்தில் அபயமுத்திரை; இடது மேல் கரம் சங்கு கொண்டிருக்க, இடது கீழ் கரம் இடை பற்றியிருக்க... இதனை, 'கடி ஹஸ்தம்' நிலை என்கிறது சிற்ப சாஸ்திரம்! 'உருளை மகுடம், 'சவடி' எனும் கழுத் தணி, 'பத்ரகுண்டலம்' எனும் காதணி, இடது கரத்தில் கேயூரம், வலதில் கைவ ளை கள், கால்களில் சலங்கை என கல்லில் மின்னும் இந்த அழகு... சோழர்களின் சிற்பத்திறனுக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு!' என்கிறார் தமிழக தொல்லியல் துறை வெளியீடான 'சிவபுரம்' நுாலின் ஆசிரியர் ப.சகிலாபானு. 'இந்த கொற்றவையே நாங்கள் வணங் கும் துர்கை' என்கிறார் சிவபுரம் கிராம பெரியவரான சிவ . கண் . தாமோதர அடியார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !