உள்ளூர் செய்திகள்

வா வாசி யோசி...

வேடங்கள் எங்களுக்கு வேடிக்கையேநடிகர்களை பின்பற்றும் கும்பல் பார்த்து வெறுத்து போனவர்களே இல்லையா; அரசியல் நாற்றங்களில் மூச்சடைத்து, 'இதற்கு ஒரு விடிவுகாலம் கிடையாதா' என வெதும்புவோரே இல்லையா; ஏன் இல்லை... இவர்கள், செங்கல்பட்டு, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி இதழியல் துறையின் இளநிலை மாணவர்கள்; மேற்சொன்னதன் சாட்சிகள்! 'நான் தெ ன்காசியின் 'ஆய்குடி'க்காரன். 'வீரம் மட்டுமே அழகல்ல' என்பதை ஈகையால் உணர்த்திய கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் ஆண்ட மண்ணைச் சேர்ந்தவன். அவன் 'யானைகளை பரிசளிப்பவன்' என்கிறது புறநானுாறு. 'எந்தவொரு பலனையும் எதிர்பாராது அளிப்பதே கொடை' என்று சங்க இலக்கியம் வழி எனக்கு உணர்த்திய அவனை பின்பற்றுவோம் இளைய சமூகமே!' என்.எஸ்.ஸ்ரீசாந்த், 3 ம் ஆண்டு 'மறக்க முடியாத 1999, ஜூலை 23; கையில் குழந்தையோடு தாமிர பரணிக்குள் விழுந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீத்த 23 வயது இளைஞரான ஜே.கைசர் அப்துல் சலாம், என் தாத்தா. பொதுசேவை ஆர்வத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து, போராட்ட களத்திலேயே மாண்ட என் குடும்பத்து ஆளுமையை மட்டுமே நான் கொண்டாடுகிறேன்! எஸ்.ஷபியா தக்ஸீன், 2 ம் ஆண்டு 'தன் 13 வயதிற்குள் 38 முறை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றிருப்பினும், தன்னை உணர்ந்து தன் பாதை மாற்றி, 1986ல் தன் 20வது வயதில் 'உலகின் இளம் ஹெவிவெயிட் சாம்பியன்' பட்டம் வென்று உலகை வியக்க வைத்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்; 'நான் என்னை நம்புவதால், எந்த வேலை செய்தாலும் அதில் நானே வெற்றியாளன்' எனும் அவரது மனஉறுதி எனக்கான ஆசிரியர்!' எஸ்.முகம்மத் ஷாஹித், 2 ம் ஆண்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !