நாங்க என்ன சொல்றோம்னா...: காந்தி கண்ணாடி
அறுபதின் ஆசையை நிறைவேற்றும் இருபது!சுப நிகழ்ச்சிகளை நிர்வகிக்கும் கதிரிடம், தன் அறுபதாம் கல்யாண ஆர்டரைத் தருகிறார் செக்யூரிட்டி பணியாளர் காந்தி. கதிரின் ஒரு கண்ணுக்கு காந்தி தரவிருக்கும் லட்சங்களும், மறு கண்ணுக்கு மனைவி கண்ணம்மா மீதான அவரது காதலும் தெரிகிறது. கதிர் அறுவடை செய்தது எதை? 'காந்தி 52 லட்சம் ரூபாய்க்காக திருடன் ஆகி விடுவாரோ; அந்த பணம் காந்தியிடம் இருந்து திருடு போய் விடுமோ' என்று தரைமட்டத்திற்கு நாம் யோசித்தால், அதற்கும் கீழே யோசித் திருக்கிறார் இயக்குனர். கதையின் போக்கை தீர்மானிக்கும் பணம் குறித்து குறைந்தபட்சம் நம்மி லிருந்து ஒரு முழம் கூட்டி சிந்தித்திருக்க வேண்டாமா? ' அறிமுக நாயகன் ' பாலா வின் நடிப்பு பற்றாக் குறையை மறைத்து கொள்கிறார் காந்தி யாக வரும் பாலாஜி சக்திவேல். ஜாக் கிசானை திரையில் பார்த்து குதுாகலிப் பது, காரணமின்றி போலீஸுக்கு பயந்து ஓடுவது உள்ளிட்ட காட்சிகளில் அவரது குழந்தைத்தனமான உடல்மொழி ரசிக்க வைக்கிறது! 'கதைக்கு 'சுபம்' போட வேண்டுமென்றால் இந்த பாதையில்தான் பயணித்தாக வேண்டும்' என்பதை உடைத்து எதிர்திசையில் பயணிக்கிறது க்ளைமாக்ஸ். இறுதி அத்தியா யத்தில் விவேக் - மெர்வினின் இசை மனதை உறைய வைக்க, யுவன் சங்கர் ராஜாவின் குரல் உருக்குகிறது! அறுபது கடந்த மனைவி கண்ணம்மாவின் கண்களுக்கு இளம் வயது காந்தி தெரியும் போதும், உடலை போர்த் திய வெள்ளை துணியை மீறி 'பச்சை' குத்திய கை வெளியே தெரியும்போதும், இயக்குனர் ஷெரீப்பின் படைப் பாற்றல் மீது நம்பிக்கை துளிர்க்கிறது. கதையை சுவாரஸ்யமாக துவக்குவ திலும் முடிப்பதிலுமான படக்குழுவி னரின் அக்கறை, நடுவினில் கொஞ்சம் நழுவி இருக்கிறது. ஆக...'ஒரு நாயகன் உதயமாகிறான்...' பாடல் பாலாவுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும்!