உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: தக் லைப்

'காற்று எப்படி வீசுகிறது ரமேஷ்; 'உஷ்ஷ்ஷ்...' என்று வீசுகிறது சுரேஷ்!' - தக் லைப்!ரங்கராய சக்திவேல் எப்படிப்பட்ட கேங்ஸ்டர்; அவர் அப்பேர்பட்ட கேங்ஸ்டர்!சக்திவேலின் அண்ணன் மாணிக்கம், விசுவாசி பத்ரோஸ், தம்பியாக கருதும் அமரன், மனைவி ஜீவா, காதலி இந்திராணி ஆகியோரின் குணங்களும் தேவைகளும் சேர்ந்து சக்திவேலின் வாழ்வில் நிகழ்த்தும் சம்பவங்களே கதை!சரி... எத்தகைய குணம், எத்தகைய தேவை; அது ஒரு மாதிரியான குணம், ஒரு மாதிரியான தேவை!இதுபோலத் தான் மொத்த படத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் எடுத்திருக்கின்றனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனமாக காட்சிகள். குண்டும் குழியுமான சாலைகளாக வசனங்கள். 'குடும்ப அரசியல்' கட்சி உறுப்பினர்கள் போல குழப்பும் பாத்திரங்கள்!கமல் - நாசர் மற்றும் சிம்பு - த்ரிஷாவை வைத்து வசனம் வழி கதை சொன்ன சக்திவேல் - மாணிக்கம் மற்றும் அமரன் - இந்திராணி சம்பந்தப்பட்ட இரு காட்சிகள்தான் இப்படைப்பின் அதிகபட்ச முயற்சி. 'தோட்டா முன் பாய்ந்து நாயகனை காப்பாற்றி உயிர்விடும் வழக்கமான பணியும் இல்லை' எனும்போது எதற்காக இந்திராணி பாத்திரம்?'என்னை அறியாம கை வந்து தடுக்குது பாரு...' என்பது உள்ளிட்ட விஷயங்கள் கமலின் நுண்நடிப்பிற்கு தீனி தந்தாலும், சுரத்தில்லாத கதையால் எதையும் ரசிக்க முடியவில்லை!மையக்கதையே தாக்கமின்றி திண்டாடு கையில் மூன்றாம் தலைமுறை காவலர், காணாமல் போன தங்கச்சியை வைத்து கிளைக் கதைகள் வேறு! நல்வாய்ப்பாக ரவி கே.சந்திரனின் ஒளியும், ரஹ்மானின் ஒலியும் நம் ரசனையை ஒழிக்கவில்லை.இயக்குனரின் மனதிலும் எழுத்திலும் இருந்தது காட்சிகளாக மாறவில்லையா அல்லது அகப்பையில் இருந்ததே இது தானா?ஆக...கிட்டத்தட்ட 160 நிமிடங்களுக்கான கமலின் பேருரையை மணிரத்னம் குரலில் கேட்பது போன்ற கிறுகிறு அனுபவம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !