நாங்க என்ன சொல்றோம்னா...: தலைவன் தலைவி
பாண்டிராஜ் வழிச்சு ஊத்துன இட்லி! விஜய் சேதுபதி தனக்குத்தானே குழாயடி சண்டை போட்டுக்கிற மாதிரி, படம் முழுக்க அவரோட கொழ கொழ சத்தம்; இதை 'படம்'னு சொல்றவனைப் பார்த்து தாராளமா கேட்கலாம்... 'நீங்க என்ன புல்லா'ன்னு; ஏன்னா... 'அவன் அப்படி காய்ஞ்சு போய் கிடக்கிறான்'னு அர்த்தம்! வழக்கமான வரிசையில 'டைட்டில் கார்டு' இல்லாம கொஞ்சம் அப்படி, இப்படி மாறி மாறி வருது; அந்த ஒரு வித்தியாசம்தான்! 'ரீல்ஸ்'ல கூட கணவன் - மனைவி உறவை அவ்வளவு அழகழகா காமிக்கிறா னுங்க... பசங்க, கடைக்குட்டி சிங்கம் தந்த பாண்டிராஜுக்கு ஏன் இந்த கொலைவெறின்னு தெரியலை! 'எதுக்கு சண்டை போட்டுக்குறாய்ங்க'ன்னு 'டிரெய்லர்' யோசிக்க வைச்சதை விட, 'எதுக்கு இவனுங்க சண்டை போட்டுக்கிட்டானுங்க'ன்னு படம் முடிஞ்சதுக்கு அப்புறமும் மண்டை காயுது. சரி... சண்டையாவது உறுத்தா இருக்குதான்னு பார்த்தா... தான் எதிர்த்த ஆளுகிட்டேயே பதவி பிச்சை கேட்டு, அதுக்கு 'விளக்கம்'ங்கிற பேர்ல விளக்கெண்ணெய் தடவி உருட்டுன 'வியாக்கி யானம்' மாதிரி இருக்கு; அபிராமி... அபிராமி! புருஷனும் பொண்டாட்டியும் சண்டை போட்டு மூணு மாசம் பிரிஞ்சு இருக்குறாங்களாம்... காரணம் குடும்பமாம்; அவங்க கடைசியில சேர்ந் துக்கிறாங்களாம்... காரணம், அவங்களாம்; 'டிவி' சீரியலை மட்டமா நினைக்கிற ஆட்களை தியேட் டருக்கு வரவைச்சு, 'இனிமே அப்படி நினைப் பியா'ன்னு 'ஆப்பு' வைக்கிற முயற்சி; முயற்சிக்கு... பரிபூரண வெற்றி! 'அவன் போட்டிருக்கிற ஜட்டி ஓட்டை ஓட்டையா இருக்குதுன்னு நீ கலாய்க்கிறே; அத்தனை ஓட்டை இருந்தாலும் அவன் ஜட்டி போட்டிருக்கானேன்னு நான் சந்தோஷப் படுறேன்'னு கெட்டதுலேயும் நல்லதை கண்டு பிடிக்கிற பரந்த மனசுக்கு இந்த படம் மிகச் சிறந்த படம். ஆக... கண்டதையும் அள்ளிப் போட்டு கொத்தப்பட்ட கொடுமையான கொத்து பரோட்டா!