உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: தி பெங்கால் பைல்ஸ் (ஹிந்தி)

சொல்... ஹிந்துவே... என்ன சொல்கிறது படம்?சுதந்திரத்திற்கு முன் ஹிந்துக் களை குறி வைத்து நிகழ்த் தப்பட்ட கொடூரத்தை, 'இந்தியா - பாகிஸ்தான்' பிரிவினைக்கு முக்கிய காரண மான அன்றைய வங்கத்து வன்முறையை, 'பஹல் காம்' ரத்த பிசுபிசுப்புக்கு இணையாய் காட்சிப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி! 'உன் மதத்தின் மீது நம்பிக்கையற்று இருக்கும் நீ எப்படி எனக்கு இணையாக இருக்க முடியும்' என்று ஹிந்துவை நோக்கி வீசப்பட்ட அன்றைய கேள்வி, திரை தாண்டி வந்து 'இன்றா வது நீ மாறி இருக்கிறாயா' என்று என் உயிர் துளைக்கிறது! 'காந்தியின் அகிம்சை கொள் கையால் சுதந்திரம் பெற்றோம்' என்பதையே படிக்கத் தந்து, அதில் பரிட்சை வைத்து பழக்கப்படுத்திய தால், 'என் வீட்டு பெண்களை அவன் தொட வந்தாலும் நான் அகிம்சையோடு தான் இருக்க வேண்டுமா' என்று ஆயுதத்தை தரையிலிட மறுத்த வங்கத்து பிராமணனை இதுவரையில் அறியாமல் இருந்து விட்டேன்! இதில், அவன் வங்கப்புலியாய் உறுமுகிறான்; 'பெண்கள் தற்காப்புக்கு விரல் நகங்களை பயன் படுத்த வேண்டும்' என்று காந்தி பிரசாரம் செய்கையில், அவன் சொல்லும் பதிலானது... 'ஆப்பரேஷன் சிந்துார்' தன் அப்பனை அறி முகப்படுத்துவது போல் இருக்கிறது! 'ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை வெறும் 8 பேர் 'இந்தியா - பாகிஸ்தான்' என பிரித்தது எந்தவகையில் நியாயம்' எனும் கேள்வியை, நெருப்பின் தகிப்புடன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்; அந்த சூட்டில் சுருண்ட ஹிந்து புழுக்களில் ஒன்றாய்... 'மா பாரதி' பாத்திரத்தில் அசாத்தி ய நடிப்புடன் பல்லவி ஜோஷி. நிகழ்ந்த கொடூ ரத்தை... விரிந்த இமைகள் உறைந் திருக்க, புருவங்களை யும் நெற்றியையும் சுருக்கி விரித்து, தன் நடிப்பு தாண்டவத்தில் பல்லவி சொல்லும் 'க்ளைமாக்ஸ் ' காட்சி... எனக்கு 'உப்பு' நீட்டுகிறது. ஆக...'இனியாவது நம்மை உணர வேண்டும்' என்ற எண்ணம் துளியும் இல்லாத புழுக்களுக்கு இப்பழம் புளிக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !