உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: விடுதலை பாகம் 2

இயக்குனர் வெற்றிமாறனுக்கும் அடி சறுக்கும்!'நீங்க யாராகப் போறீங்கங்கிறது நான் சொல்ற கதையை கேட்குறதுலதான் இருக்கு!' - காவலர் குமரேசனுடன் காட்டுவழி பயணத்தில் கைதி பெருமாள். இதன் அடிப்படையில்...'இக்கதை முழுக்க கற்பனையே' என்று வெற்றிமாறன் துவக்கத்தில் பேசியிருப்பினும், 'நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ற தலைவன் அவன் பொண்ணை உனக்கு கட்டிக் கொடுப்பானா' என்று பெருமாள் சீறுகையில், 'இன்னும் எத்தனை நாட்களுக்கு 'சமூகநீதி' கோஷத்தில் ஏமாறப் போகிறோம்!' எனும் சிந்தனை! 'நான் சொல்றதுதான் பேரு... நீ கூப்பிடுறது என் பேரு இல்ல' என்று அன்றைய கருப்பன் அடிவயிற்றில் இருந்து கத்தும் போதும், குறிப்பிட்ட நபர் பேசுகையில் 'சத்தமா பறை அடி... அவன் பேசுறது எனக்கு கேட்கக்கூடாது' என்று பெருமாள் அலறும் போதும், 'அவங்க ரெண்டு பேர் போதாதா... நீங்களுமா வெற்றி' எனும் சிந்தனை! 'விடுதலை முதல் பாகம் தந்த நிறைவை இது தரவில்லையே; 'வழிநெடுக காட்டுமல்லி...' தந்த வாசம், 'தினம் தினமும் உன் நினைப்பு...' பாடலில் இல்லையே; 'கதை முழுக்க பெருமாள் வகுப்பு எடுத்துக் கொண்டே இருந்தால் நான் என்ன செய்வது' என்று இளையராஜா ஒதுங்கி கொண்டாரோ...' எனும் சிந்தனை! 'காட்டில் ஒளிந்திருந்து மக்களுக்கு நல்லது செய்யும் ஒருவனின் பின்னணி பற்றி தமிழ் சினிமா இதுவரை என்ன சொல்லி இருக்கிறதோ அதையே வெற்றியும் சொன்னது ஏன்' எனும் சிந்தனை! 'அதிகாரிகள் என்ன சொன்னாலும் நம்பும் முதல்வர்' எனும் ஒட்டடையில் இரண்டாம் பாகம் தொங்குகிறது. வெற்றிமாறன் படம் என்பதால், 'படம் சிறப்பு' என்று சொல்லிவிட முடியுமா' எனும் நிறைவு சிந்தனை! இவற்றால்... ஸாரி... பெருமாள்.ஆக...: முதல் பாகம் மனசுல தங்குச்சு; இது, மனசுக்கு வெளியே நிற்குது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !