உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்: எலக்ட்ரால் பவுடர் கலந்த தண்ணீர்

டாக்டர்ஸ் கார்னர்: எலக்ட்ரால் பவுடர் கலந்த தண்ணீர்

என் நாய்க்கு அடிக்கடி தோல் அழற்சி ஏற்படுகிறது; அது ஏன்?- ஆர்.சவுமியா, கோவை.வெயில் காலங்களில் அதீத வெப்பத்தால் நாய்கள் பாதிக்கப்பட்டாலும் தோல் அழற்சி ஏற்படலாம். உண்ணி, பேன், மைட் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சொறிவதால் தோலில் தடிப்புகள் வரும். பப்ளிக் பார்க் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு வாக்கிங் அழைத்து செல்லும் போது, பார்த்தீனியம் செடிகளில் உரசினாலோ அல்லது விஷப்பூச்சிகள் கடித்தாலோ, தோலில் சிவப்பாக தடித்து காணப்படும். அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது. வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குடிக்க நல்ல தண்ணீர் அடிக்கடி கொடுப்பது அவசியம். நீர்ச்சத்து குறைந்தால் நாய்கள் சோர்வாக, சோம்பலாக இருப்பதோடு வாயில் நுரை வெளியேறலாம். கண்கள் வெளிர் இளஞ்சிவப்பாக மாறலாம்.இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், முதலுதவியாக வீட்டிலே எலக்ட்ரால் பவுடர் கலந்த தண்ணீர், நாட்டு வெல்லம் கலந்த தண்ணீர் கொடுத்த பின், மருத்துவரிடம் அழைத்து வர வேண்டும். மேலும் இக்காலத்தில் நாய்களுக்கு அதீத வெப்பத்தை சமன்படுத்த முடியாமல் சூட்டுக்கொப்புளம் வரலாம்.இதற்கு சுய மருத்துவம் செய்யக்கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமே கொடுக்க வேண்டும். உணவில் விட்டமின் ஏ, டி3, இ மற்றும் சி ஆகியவை இருப்பதை உறுதி செய்தால், வெப்பத்தால் வரும் நோய்களில் இருந்து, செல்லப்பிராணிகளை தற்காத்துக்கொள்ள முடியும்.- எ. செல்வபிரபாகரன், கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை