உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நானும் ஜாக்கும்!

நானும் ஜாக்கும்!

என்னதான் வீட்டிற்கு காவலாக இருந்தாலும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் சந்தோஷத்தில் முத்தமிட்டு அன்பாக வரவேற்பான் எங்க 'ஜாக்' என்கிறார், கோவையை சேர்ந்த ஷனா தியா எங்க வீட்ல லியா, லியோ, ஜாக் என மூன்று பெட் இருக்கு. அதில் ஜாக் தான் ரொம்ப சுட்டி. ஒரு இடத்துல இருக்க மாட்டான். வீட்டில் ஒரு 3 வயது குழந்தை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இவன் வீட்டில் இருந்தால் சொன்னதையெல்லாம் கேட்பான். அதே மாதிரி புதுசா யாராவது வீட்டிற்கு வந்தால் விட மாட்டான். வீட்டுக்கு ரொம்பவும் பாதுகாப்பாகவும், பழக்கப்பட்டவர்களிடம் அன்பாகவும், சுட்டியாகவும் இருப்பான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி