உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்! மல்டிவிட்டமின் உணவு அவசியம் 

டாக்டர்ஸ் கார்னர்! மல்டிவிட்டமின் உணவு அவசியம் 

என்னோட சிட்ஜூக்கு, அடிக்கடி கண்ணை சுற்றிலும் சிவப்பா மாறிடுது. இதற்கு என்ன காரணம்?- எஸ்.உஷாராணி, கோவை.நாய்களுக்கு பொதுவாக கண்களை சுற்றிலும்,'டெமோடிக்கோசிஸ்' என்ற பூச்சி இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில், இப்பூச்சியின் பெருக்கம் அதிகரித்து, அப்பகுதியில் உள்ள முடிகள் உதிரும். எப்போதும் அரித்து கொண்டே இருக்கும். இதனால், கண்களின் மேல், கீழ் பகுதிகள் சிவப்பாக மாறிவிடும். இதற்கு மருந்துகள் இருப்பதால், கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.கண்களின் உள்பகுதி, அதாவது வெள்ளைத்திரையில் சிவப்பாக உருண்டை வடிவில் வீங்கியிருந்தால், அதை 'செர்ரீ ஐ' என்பர். அறுவை சிகிச்சை மூலம், இதை அப்புறப்படுத்தலாம்.நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, முட்டை வெள்ளைக்கரு, மல்டி விட்டமின் டானிக் கொடுக்கலாம். எந்த உணவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு கொடுப்பது போல, சிறிதளவு கொடுத்து, அது ஜீரணமாகிறதா என பரிசோதித்து பின் அளவீட்டை அதிகரிக்க வேண்டும்.-டாக்டர் பி.தங்கராஜ்,கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ