உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்: ஸ்வீட் செல்லங்களுக்கு நோ சாக்லேட்

டாக்டர்ஸ் கார்னர்: ஸ்வீட் செல்லங்களுக்கு நோ சாக்லேட்

நாய்கள் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?- ஆர்.தமிழரசி, கோவை.நாய்கள் சாக்லேட் சாப்பிட்டால், சில நேரங்களில் உயிர் போகும் அளவிற்கு, தொந்தரவுகள் ஏற்படும். சாக்லேட்களில் 'தியோப்ரோமைன்' என்ற வேதிப்பொருள் உள்ளது. டார்க் சாக்லேட், மில்க், ஒயிட் சாக்லேட் வகைகளில் இவற்றின் அளவு மாறுபட்டு இருக்கும். உதாரணமாக ஒரு கிராம் டார்க் சாக்லேட்டில் 20 மி.கி.அளவு 'தியோப்ரோமைன்' உள்ளது. மில்க் சாக்லேட்டில் 2மி.கி., ஒயிட் சாக்லேட்டில் 0.1 மி.கி. அளவு 'தியோப்ரோமைன்' இருக்கும்.நாய்கள் சாக்லேட் சாப்பிட்டு விஷத்தன்மை ஏற்பட்டால், சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். ஓய்வின்மை , அதீத மூச்சிரைப்பு, இதயதுடிப்பு அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு, ரத்தக்கசிவு ஏற்படும். நாய்களால் இந்த வேதிப்பொருளின் நச்சுத்தன்மையை ஜீரணம் செய்யமுடியாது. டார்க் சாக்லேட்டில் அதிகபட்ச 'தியோப்ரோமைன்' உள்ளது. ஒருவேளை சாப்பிட்டுவிட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்.- மெரில்ராஜ், அரசு கால்நடை உதவி மருத்துவர், முடுவார்பட்டி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ