உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  ஒரு தேடல், பிசினஸ் ஆனது! இது, இளங்குமரனின் பெருங்கதை

 ஒரு தேடல், பிசினஸ் ஆனது! இது, இளங்குமரனின் பெருங்கதை

சென்னை, கொளத்துாரில் செல்லப்பிராணிகளுக்கான ஷாப் நடத்தி வரும் இளங்குமரன், செல்லப்பிராணிகளுக்கான கூண்டு, பொருட்கள், விளையாட்டு பொம்மைகளை, சீனா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இங்கு சப்ளை செய்து வருகிறார். இவர் கூறியதாவது: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், வாஸ்து மீன் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டு, பொழுதுபோக்கிற்காக இத்துறைக்குள் நுழைந்தேன். என் வீட்டில்பப்பி இருப்பதால், அதற்கான தரம்வாய்ந்த கூண்டு எங்கே கிடைக்கும் என தேடிய போது, அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் எங்கும் உற்பத்தி செய்யவில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்க முடிவெடுத்து, அதையே பிசினஸாக மாற்றினேன். செல்லப்பிராணிகள் வீட்டில் ஒரு பிரதிநிதியாக மாறிவிட்டனர். அதனால், சேவை துறைக்கான வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த 2006 ல், வெறும் 650 கிலோ எடையில், கூண்டு இறக்குமதி செய்து, மூன்று மாதங்களாக விற்றேன். தற்போது, 40,000 கிலோ எடை கொண்ட கூண்டுகளை, ஒரு மாதத்திற்குள் விற்கிறேன். இதிலும் தமிழகம் தவிர, குஜராத், மகாராஷ்டிரா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட, பெருநகரங்களில் இருந்து வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம். மொத்த விற்பனைக்கும், சில்லறை விற்பனைக்கும், ஒரு பொருளின் அதிகபட்ச லாப அளவீட்டில், மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. செல்லப்பிராணிகளின் நலனை பிரதானமாக கொண்டு செயல்பட்டாலே, இத்துறையில் நீடித்த வளர்ச்சி நிச்சயம்.நாய், பூனை, பறவை, பாம்பு, முதலை, உடும்பு, தவளை முதல் அனைத்துஎக்ஸாடிக் செல்லப்பிராணிகள் மற்றும்வனவிலங்கு சரணாலயங்கள், பூங்காக்களில் உள்ள, பெரிய விலங்குகளுக்கான கூண்டு இறக்குமதி செய்கிறேன். ஏனெனில், இங்கே தயாரிக்கும்கூண்டு என்பது வெறும் இரும்பு கம்பிகளை இணைத்து, இறுதியில் அதில் கெமிக்கல் பவுடர் தேய்த்து விற்கின்றனர். இது துருப்பிடிக்கும் என்பதோடு, உடலில் குத்தி காயங்களை ஏற்படுத்தலாம். இதில் உரசும் போது, செல்லப்பிராணிகளுக்கு அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். ஆனால், சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில், செல்லப்பிராணிகளுக்கான கூண்டு தயாரிக்க, பிரத்யேக செயல்முறை பின்பற்றப்படுகிறது. ஆறுமுறை கெமிக்கல் பவுடரில் சுத்தப்படுத்திய பிறகே, அக்கூண்டு இறுதி வடிவம் பெறுகிறது. இதனால்,அதிக வலிமை பெறுவதோடு, எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் உயர்தரமிக்க மீன் தொட்டியில்,அதிநவீன சுத்திகரிப்பான், புறசூழலுக்கு ஏற்ப தொட்டிக்குள் வெப்பநிலையை மாற்றுதல், ஆட்டோமேட்டிக் பீடிங் மிஷின் உள்ளன. இதை ஓராண்டுக்கு சுத்தப்படுத்தவே தேவையில்லை. பறவைகளுக்கு, முன்பக்க கண்ணாடியுடன் கூடிய, இரும்பு கூண்டு விற்கிறோம். முயல், தவளைக்கு பிளாஸ்டிக் கூண்டு இறக்குமதி செய்கிறோம். ஒரு அடி முதல் 250 அடி வரை, வாடிக்கையாளர்களின் விருப்பம், செல்லப்பிராணிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, கூண்டின் அளவு முடிவு செய்யப்படும். இவற்றை வளிநாடுகளில் வாங்க, மிக முக்கிய காரணம், அங்கே செல்லப்பிராணிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் மூலப்பொருட்களை பயன்படுத்துவதே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை