உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / லகு- பிகு தெரியுமா உங்களுக்கு?

லகு- பிகு தெரியுமா உங்களுக்கு?

'ஒருவன் ஒருவன் முதலாளி...' பாட்டுல, ரஜினி ஸ்டைல்லா வெள்ளைக்குதிரை ஓட்டுறாரேன்னு நினைச்சு, நீங்களும் குதிரை வாங்குனா, அதுகிட்ட உதை வாங்குறத யாராலும் தடுக்க முடியாதுன்னு' குபீர் சிரிப்புக்கு பின் சொன்னார் குதிரைப் பயிற்சியாளர் சந்திரசேகரன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, குதிரைக்கு குரூமிங் செய்வது, லாடம் கட்டுவதில் அனுபவம் கொண்டவர்.ஸ்பீடு தான், குதிரை மேல பலருக்கு கிரேஸ் வர்றதுக்கு காரணம். பந்தயத்துக்காகவும், பெட்டாவும், குதிரை வாங்கி வளர்க்க ஆசைப்பட்டா, இதிலெல்லாம் கட்டாயம் கவனம் செலுத்தணும் என்கிறார், பயிற்சியாளர் சந்திரசேகரன். '' குதிரை வாங்கறதுக்கு முன்னாடி அதுமேல ஏறி சவாரி செய்ய பயிற்சி எடுக்கணும். 'வாரத்துல ரெண்டு நாள் கோர்ஸ்' ங்கற விளம்பரங்கள பார்த்து நம்பி, பணம் கட்டி ஏமாந்துடாதீங்க. குதிரை மேல பயம் இல்லாம ஏறி உட்காரவும், உங்க பக்கத்துல, அது வந்து நிக்க பழகறதுக்குமே, ஒரு மாசம் ஆகிடும். குதிரைய கட்டி வைக்க தனியிடம் இருக்கணும்; பராமரிப்பு முறைகள் தெரிஞ்சிக்கணும்.சுழற்சி முறையில, உணவு கொடுத்துக்கிட்டே இருக்கணும். குதிரையோட ஆரோக்கியமே, 'மேய்க்கறதுல பாதி; தேய்க்கறதுல மீதி'ன்னு, ஒரு பழமொழியே இருக்கு. அதோட உடம்புல முடிக்கு அடியில வெள்ளையா படர்ந்திருக்கறதை தினமும், தேய்ச்சி விடணும். குதிரையோட கால் அடிப்பகுதி 'குளம்பி' தேயாம இருக்க, வளைவான இரும்புதகடு வச்சி, லாடம் அடிக்கணும். குதிரை வளர வளர லாடத்தை மாத்தணும். குதிரையோட நகத்தை முறையா வெட்டணும். இதெல்லாம் செய்தா, குதிரைக்கு நீங்க தான் எஜமான்,'' என்றார்.

'லகு-பிகு'

ஹெல்தியான குதிரைன்னு எப்படி கண்டுபிடிக்கறது, கை மருத்துவம் பத்தி, 'அசுவ சாஸ்திரம்' புத்தகத்தில் நிறைய தகவல் இருக்கு. இதில, குதிரை வளர்க்கறதுக்கான சீக்ரெட், 'லகு-பிகு' பத்தி குறிப்பிட்டு இருக்கு. 'லகு'- குதிரை முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் போது, அதனிடம் நாம் கனிவாக இருப்பது.'பிகு'- குதிரை பணிந்து இருக்கும் போது, நாம் ஆளுமை செலுத்துவது-ன்னு அர்த்தம். இந்த சூட்சமம் தெரிஞ்சிக்கிட்டா, குதிரைய உங்க கட்டுப்பாட்டுல, வைச்சிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி