பாலக்காட்டில் டாக் ஷோ!
பாலக்காடு கென்னல் கிளப் சார்பில், அனைத்து இன நாய்களுக்கான, 58, 59வது சாம்பியன் ஷிப் கண்காட்சி வரும் 28ம் தேதி, கண்ணாடி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இக்கண்காட்சியில், 50 இனங்களை சேர்ந்த நாய்களுக்கு, 5 பிரிவுகளில் தனித்தனியாக போட்டி நடக்கிறது. இதில், நாட்டு இன நாய்களுக்கான பிரத்யேக சுற்றும் உள்ளது. கண்காட்சியில், நடுவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் பப்பிக்கு, சாம்பியன் பட்டத்துடன் விருதுகள் காத்திருக்கின்றன. பாலக்காடு, லுாலுா மாலுக்கு அருகேயுள்ள, கண்ணாடி மேல்நிலைப்பள்ளியில், வரும் 28 ம் தேதி, காலை 9 :00 மணி முதல் மாலை 6:30 வரை, கண்காட்சி நடக்கிறது. இங்கு பப்பிகளுக்கான இனப்பெருக்கம், குரூமிங் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்பதால், அவர்களிடம் உங்களுக்கான சந்தேகங்களை கேட்டறியலாம். பார்வையாளராக பங்கேற்றும், சாம்பியன் பப்பிகளை கண்டு ரசிக்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.