உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / எனது டைமண்ட் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டர்

எனது டைமண்ட் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டர்

ஊட்டியை சேர்ந்தவர் கணேஷ் ராமலிங்கம். இவர், 'ஜெர்மன் ஸ்பிட்ஸ்' என்ற உயர்ரக நாயை வளர்த்து வருகிறார். அவர் கூறுகையில், ''பல தனியார் கம்பெனிகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக செல்ல நாயை வளர்த்து வருகிறேன். அதற்கு 'டைமண்ட்' என பெயர் வைத்துள்ளேன். இதை ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்' என்று கூட கூறுவேன். காரணம், பணிக்கு சென்று திரும்பி வந்தவுடன், எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும், இதனுடன் விளையாடினால் போதும்; மனம் லேசாகும். நாம் அன்புடன் பயிற்சி அளித்தால், அனைத்து பணிகளையும் கீழ் படிதலுடன் செய்யும். நாம் உணவு வைத்து விட்டு, அதை உட்கொள்ள 'கமென்ட்' செய்யும் வரை அப்படியே நிற்கும். இதை பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவ்வளவு பிடிக்கும்,'' என்றார்.

நாய்க்கு 'நான் வெஜ்' மட்டுமே நல்லது!

நாய்களை டைல்ஸ், கிரானைட் உள்ளிட்ட வழுவழுப்பான தரைகளில் நடக்க விடக்கூடாது. தினமும் முடியை சீவி விட வேண்டும். உன்னி மற்றும் பிற பூச்சிகள் இருப்பது குறித்து கண்காணிக்க வேண்டும்.நாய்களுக்கு டாக்டரின் ஆலோசனை இன்றி மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிக் கொடுக்க கூடாது. மாமிச உண்ணிகள் என்பதால், நாய்களுக்கு நாம் உண்ணும் தின்பண்டங்களை கொடுக்கக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை