உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தெருவுக்கே காவல்காரன்

தெருவுக்கே காவல்காரன்

எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, தெருவுக்கே காவல்காரன் ஜாக்கி என்கிறார், மதுரை, சங்கரநாராயணன் நகரை சேர்ந்த சோமசேகர். ''சிறிய குட்டியாக வந்த ஜாக்கிக்கு இப்போது வயது 9. இத்தனை ஆண்டுகளும், எங்களின் எல்லா சுக துக்கங்களிலும் பங்கேற்று இருக்கிறான். அவனும் எங்கள் வீட்டில் ஒருவனே. இரவில் துாங்கவேமாட்டான். இதனால் நாங்கள் மட்டுமல்ல, தெருவே நிம்மதியாக இருக்கிறது. அடையாளம் தெரியாதவர்கள் வந்தால், ஜாக்கியிடம் இருந்து மட்டும் தப்பவே முடியாது. செல்பி எடுக்க போனை இவன்முன் நீட்டினால், வித்தியாசமான ரியாக் ஷன்களை காட்டி போஸ் கொடுப்பான். வீடியோகாலில் யாராவது பேசினால், உடனே தன்னுடைய குரலையும் பதிவு செய்துவிடுவான். ஜாக்கி இருப்பதால் நாங்கள் வெளியிடங்களுக்கு, தைரியமாக செல்ல முடிகிறது'' என்கிறார் சோமசேகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி