உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / புதுசா ஒரு யோகா: மனசு ஆகுதாம் ரிலாக்ஸா

புதுசா ஒரு யோகா: மனசு ஆகுதாம் ரிலாக்ஸா

மனசை ரிலாக்ஸ் செய்ய யோகா செய்றது, புக் படிக்கறது, பெட்ஸ் வளர்க்கறது, அவுட்டிங் போறது, ஷாப்பிங் செய்றதுன்னு, நிறைய முறைகள் இருக்கின்றன. இதுல சற்று வித்தியாசமானது செல்லப்பிராணிகளை கொஞ்சியபடியே யோகா செய்து, மனசை ரிலாக்ஸ் ஆக்குவது என்கின்றனர், சென்னையைச் சேர்ந்த, 'த்ரீ ரோசஸ்'களான, சிந்துஜா, ஸ்வாதி, சுபஸ்ரீ.''நாங்க மூணு பேரும் காலேஜ் பிரண்ட்ஸ். பிசினஸ் பண்ணனும்னு முடிவு எடுத்தபோதே சொசைட்டிக்கு பயனுள்ளதா அது மாறனும்னு நினைச்சோம். மேற்கு ஐரோப்பிய நாடுகள்ல 'கோட்' (ஆடு) யோகா கான்செப்ட் இருக்கறதா கேள்விப்பட்டோம். நம்ம ஊருல நிறைய தெருநாய்கள் ஆதரவு இல்லாம காப்பகங்கள்ல வளருது. இதை தத்தெடுத்து, வீட்டுல வளர்க்கணும்ங்கற ஆர்வத்த யோகா மூலமா, மக்கள்கிட்ட பரப்பணும்னு நினைச்சோம். இந்த கான்செப்ட்ல உருவானது தான், 'பெட்ஸ் வித் யோகா'. எங்களுக்கு எல்லா சிட்டியிலயும் நாய்கள் காப்பகங்களோட தொடர்பு இருக்கு. நாய்கள் தடுப்பூசி போடப்பட்டு பராமரிக்கப்படுது. யோகாவுக்கு இடையிடையே பெட்ஸ்களோட கொஞ்சலாம்; விளையாடலாம்.வாரத்துல ஒரு நாள், வெவ்வேற சிட்டிகள்ல இந்த ஈவன்ட் பண்றோம். மினிமம் என்ட்ரீஸ்ல இந்த ஈவன்ட் நடத்துறதால யோகா முடிச்சிட்டு ரிலாக்ஸா பீல் பண்றதா, கஸ்டமர்ஸ் சொல்றாங்க. ஒருமுறை இங்க வந்துட்டா, அடுத்த ஈவன்ட்ட மிஸ் பண்ணமாட்டீங்க. மேலும் விபரங்களுக்கு, www.pawgapetsyoga.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை