மேலும் செய்திகள்
மருதமலை கட்டளைதாரர்களை வெளியேற்ற முயற்சி
07-Sep-2024
'உடும்பு பிடி பிடித்தான்!' என்று தமிழில் ஒரு வாக்கியம் உண்டு. இக்வானா உடும்பின் மேல் ஆர்வம் வைத்து மதுரையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் அதனை தனது செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.அவர் கூறுகையில்...மதுரை, பழங்காநத்தம், முத்துப்பட்டியில் வசிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீடு காட்டுப் பகுதிக்கு நடுவில் தான்இருந்தது. காவலுக்கு ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர் மேன் வளர்த்தோம். பாம்பு கடித்து அவை இறந்தன. மனம் உடைந்தோம். கவலையிலிருந்து மீள மீன், மாடு, புறா வளர்க்க துவங்கினேன். ஆனாலும், எனக்கு மகிழ்ச்சியில்லை. ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் உடும்பு வகை இக்வானாவை வைத்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்தேன். ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. எனக்கு ஆர்வம் பற்றிக் கொண்டது.40 நாள் குட்டியாக இருந்த இக்வானா உடும்பை வாங்கினேன். பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் இருக்கும். ஆனால் அதுவும் நாயை போல தான், பழகிவிட்டால் நம் கட்டளைக்கு இணங்க நடந்து கொள்ளும். நாய்களுக்கு வீட்டு சூழல், வானிலை, உணவு முறை, பிற விஷத்ஜந்துக்களால் ஆபத்து உண்டு.ஆனால் உடும்பிற்கு அப்படி இல்லை. தக்காளி, கறிவேப்பிலை, கீரை, பழங்கள் தான் அதற்கு உணவு. மூன்று வேளையும் காய்கறி, பழங்கள் தான். எந்த சூழ்நிலையிலும் வாழும். சில சமயங்களில் பால் கூட குடிக்கும். ஊருக்கு செல்லும் போது எளிதில் எடுத்துச் செல்லவும் முடியும். அதை சீண்டாத வரை நம் கட்டளைகளை கேட்டு நடந்து கொள்ளும். ஆண்டிற்கு ஒரு முறை எப்படி பாம்பு தன் சட்டையை உரிக்குமோ அதே போல தான் உடும்பும். அதனால் குளிக்க வைப்பர்கள். சிலர் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை போடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. வெறும் தண்ணீரை மட்டும் வைத்து குளிக்க வைத்து, சரியான கட்டளைகளை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்து, பச்சை காய்கறிகளை பரிமாறி வளர்த்ததால் இக்வானா உடும்பும் நமக்கு ஒரு செல்லப் பிராணி தான்!
07-Sep-2024