உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இது இருந்தா போதும்... குட்டீஸ் குஷிதான்

இது இருந்தா போதும்... குட்டீஸ் குஷிதான்

உங்க டேங்குக்கு ஏற்ற யுனிக்கான பிஷ் வெரைட்டி பற்றி விளக்குகிறார் கோவை, சாய்பாபாகாலணியை சேர்ந்த ஆஸ்கர் அக்வாரியம் கடை உரிமையாளர் பிரவீன்குமார்.

ரோஸி பார்ப்

இந்த வெரைட்டில, 'மேல் பிஷ்' டார்க் கலர்ஸ்லயும், 'பீமேல் பிஷ்' லைட் கலர்ஸ்லயும் இருக்கும். இதோட துடுப்புல, பிளாக் கலர் இருந்தா, அது பீமேல் பிஷ்னு தெரிஞ்சிக்கலாம். இதை தனியா வளர்த்தா ஸ்ட்ரெஸ் ஆகிடும். பெரிய டேங்க், பான்ட் செட்-அப்ல குரூப்பா வளர்க்கலாம். அக்வாரியம் பிளான்ட்ஸ் இருக்கற டேங்க்ல வளர்த்தா, ரோஸி பார்ப் ஜாலியா விளையாடும்.

ஜீப்ரா டேனியோ

ஜீப்ரா மாதிரி, சில்வர் வித் பிளாக் கலர்ல, யுனிக்கா இருக்கும். இந்த வெரைட்டில, நிறைய கலர்ஸ்ல, ஹைபிரிட் பிஷ்சும் அக்வாரியம்ல கிடைக்குது. இதோட டேங்குல, டைகர் பார்ப், ரெயின்போ பிஷ், கவ்ரா, மோலி-னு, சில கம்பேனியன் வெரைட்டி மட்டும் தான் போடணும். அதிகபட்சம் 2 இஞ்ச் வரைக்கும் வளரும். நல்ல மெய்ன்டெய்ன் பண்ணா, மூணு வருஷம் வரைக்கும் வாழும். ஒரிஜினல் ஜீப்ராவை விட, ஹைபிரிட் வெரைட்டிக்கு தான் மவுசு அதிகம்.

பேரட் பிஷ்

பார்க்கவே கலர்புல்லா இருககற பேரட் பிஷ், ஒரிஜினல் ப்ரீட் கிடையாது. ரெட் டெவில், வெய்ஜா பிஷ்ஷோட காமினேஷன்ல ப்ரீட் பண்ணியிருக்காங்க. அதனால, இந்த வெரைட்டிக்கு வாரிசு இல்ல. ஆனா, துறுதுறுன்னு ஆக்டிவ்வா இருக்கறதால நிறைய பேர் வாங்குறாங்க. 10 இன்ஞ் வரைக்கும் வளரும், கிட்டத்தட்ட 12 வருஷம் வாழும். இதோட கலர் மெய்ன்டெய்ன் பண்றதுக்குன்னு, ஸ்பெஷல் புட் மார்கெட்ல கிடைக்குது. இதோட ஒரு ஜோடி 800 ரூபாய்.

ஆஸ்கர் பிஷ்

இது சிச்லிட் வகை பிஷ். இதுல கலர் பொறுத்து, காப்பர், லெமன், டைகர்-னு, 10 வெரைட்டி பிஷ் இருக்குது. இதோட ஸ்கின் ஷைனிங்கா இருக்கறதால, பாக்குறதுக்கு அழகா இருக்கும். இதோட டேங்க்ல கட்டாயம் ஆக்ஸிஜன் மோட்டார் செட் பண்ணணும். அதிகபட்சமா 18 இஞ்ச் வரைக்கும் வளரும். நல்லா மெயின்டெய்ன் பண்ணா, 15 வருஷம் வரைக்கும் வாழும். புட் கொடுக்கும் போது, குஷியாகி விளையாடுறதால, குட்டீஸ் சீக்கிரம் அட்டாச் ஆகிடுவாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ