உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஆக்டிவா இ மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்

ஆக்டிவா இ மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்த 'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டரின் விலையை அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் இரு வகையில் வருகிறது. வகையை பொறுத்து, 1.17 லட்சம் ரூபாய் முதல் 1.53 லட்சம் ரூபாய் வரை இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.பேட்டரி பரிமாற்றம் முறையில் மட்டுமே இந்த ஸ்கூட்டரை இயக்க முடியும். உரிமையாளரால் தனியாக சார்ஜ் செய்ய முடியாது. தற்போது, பெங்களூரு, மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டுமே பேட்டரி பறிமாற்றம் சேவைகள் வழங்கப்பட உள்ளன. படிப்படியாக, இதர முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை