பஜாஜ் என் - 125 புதிய இன்ஜின், பறக்கும் பிக்-அப்
'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், அதன் புது 'என் - 125' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 125 சி.சி., இன்ஜின் வகையில், 5வது பஜாஜ் பைக்காகும். இது, பேஸ் மற்றும் ப்ளூடூத் என இரு வகையில் வந்துள்ளது.இந்த பைக், எளிமையான சிங்கிள் கிராடில் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, புதிய 124.58 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. குண்டு குழியான மற்றும் கரடுமுரடான சாலைகளை எளிதாகக் கடக்க, 198 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை 125 கிலோவாக உள்ளது.மொத்தம் 7 நிறங்களில் வரும் இந்த பைக்கில், காம்பி பிரேக்கிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 125 சி.சி., பைக்குகளில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கில் மட்டுமே ஏ.பி.எஸ்., வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, எல்.இ.டி., லைட்டுகள், சைலண்ட் ஸ்டார்ட் வசதி ஆகியவை இந்த பல்சர் பைக்கில் உள்ளன.இந்த பைக்கிற்கு, டி.வி.எஸ்., ரைடர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்குகள் கடும் சவாலாக உள்ளன.
டீலர்
Khivraj Motors - Bajaj / KTM 99629 65266
விபரக்குறிப்பு
இன்ஜின் 124.58 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டுபவர் 11.83 ஹெச்.பி.,டார்க் 11 என்.எம்.,எடை 125 கிலோமைலேஜ் 50 - 55 கி.மீ., (எதிர்பார்ப்பு)
விலை
ரூ.94,707 முதல்