உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / சென்னையில் கார் கண்காட்சி

சென்னையில் கார் கண்காட்சி

வாடிக்கையாளர்களுக்கு கார் தேர்வு சேவைகளை வழங்கும் 'கார்பால்' மற்றும் 'மோட்டார் மாலை' இணைந்து, வரும் மே 31 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில், 'ஆட்டோ கனெக்ட்' என்ற கார் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ., ராயப்பேட்டை மைதானத்தில் நடக்கிறது.கார் தேர்வு செய்வதில், வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் ஏற்படுவதால், சரியான காரை தேர்ந்தெடுக்க உதவும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து, 15 லட்சம் ரூபாய்க்குள், எந்த சப் 4 - மீட்டர் எஸ்.யூ. வி., காரை தேர்ந்தெடுப்பது குறித்து இந்த கண்காட்சி அமைகிறது.இதில், அனைத்து சப் 4 - மீட்டர் எஸ்.யூ.வி., கார்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு, டெஸ்ட் டிரைவ் அனுபவம், கார் கடன் உதவி வசதிகள், பழைய கார் மதிப்பீடு, கார் முன்பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.கூடுதல் விவரங்களுக்கு, www.trycarpal.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை