மஹிந்திரா எக்ஸ்.இ.வி., 9எஸ் இ.வி., மூன்று டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர், 550 கிமீ ரேஞ்ச்
மஹிந்திரா நிறுவனம், 'எக்ஸ்.இ.வி., 9எஸ்' என்ற புதிய மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், 'எக்ஸ்.யூ.வி 700' காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு பேர் பயணிக்கலாம். மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த கார், 59, 70, 79 கி.வாட்.ஹார்., என மூன்று பேட்டரி ஆற்றல்களில் கிடைக்கிறது. ஒரு சார்ஜில், குறைந்தபட்சம் 550 கிமீ வரை பயணிக்க முடியும். இதை, பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 20 நிமிடம் ஆகிறது.