உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஓலாவின் முதல் மின்சார பைக் ரோட்ஸ்டர்

ஓலாவின் முதல் மின்சார பைக் ரோட்ஸ்டர்

'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனம், அதன் முதல் மின்சார பைக்கான 'ரோட்ஸ்டர்' அணிவகுப்பை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த அணிவகுப்பில், 'ரோட்ஸ்டர் எக்ஸ்', 'ரோட்ஸ்டர்' மற்றும் 'ரோட்ஸ்டர் பிரோ' ஆகிய மூன்று பைக்குகள் உள்ளன.ரோஸ்டர் எக்ஸ்ஓலாவின் முதல் பைக்காக, ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகமாக உள்ளது. இந்த பைக், மூன்று பேட்டரி வகையில் வருகிறது. இதன் விலை, 75,000 முதல் 1 லட்சம் ரூபாயாக உள்ளது.பேட்டரி இன்ஜின் - 4.5 கி.வாட்.ஹார்ஹார்ஸ் பவர் - 15 எச்.பி.,ரேஞ்ச் - 200 கி.மீ.,டாப் ஸ்பீடு - 124 கி.மீ.,0-40 கி.மீ., பிக்கப்: 2.8 வினாடி ரோட்ஸ்டர்ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட இந்த பைக்கை, நகர் பகுதிகளிலும், டூரர் பைக்காவும் பயன்படுத்தமுடியும். இந்த பைக், மூன்று பேட்டரி வகையில் வருகிறது. க்ரூஸ் கன்ட்ரோல், ஏ.பி.எஸ்., டி.எப்.டி., ஸ்கிரீன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இந்த பைக்கின் விலை, 1.05 லட்சம் முதல் 1.40 லட்சம் ரூபாயாக உள்ளது.பேட்டரி இன்ஜின் - 6 கி.வாட்.ஹார்ஹார்ஸ் பவர் - 17 எச்.பி.,ரேஞ்ச் - 248 கி.மீ.,டாப் ஸ்பீடு - 126 கி.மீ.,0-40 கி.மீ., பிக்கப்: 2.2 வினாடி ரோட்ஸ்டர் பிரோஓலாவின் ரோட்ஸ்டர் அணிவகுப்பில், இது தான் வேகமான பைக். இந்த பைக், இரு பேட்டரி வகையில் வருகிறது. இதன் ரேஞ்ச், பிரமிக்க வைக்கும் 579 கி.மீ., ஆக உள்ளது. இந்த பைக்கின் விலை, 2 லட்சம் முதல் 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது.பேட்டரி இன்ஜின் - 16 கி.வாட்.ஹார்ஹார்ஸ் பவர் - 69.73 எச்.பி.,ரேஞ்ச் - 579 கி.மீ.,டாப் ஸ்பீடு - 194 கி.மீ.,0-40 கி.மீ., பிக்கப்: 2 வினாடி டீலர்: OLA Nungambakkam - 78453 44604


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ