உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / டாடாவின் மெகா லான்ச் ஒரே நாளில் 17 லாரிகள் அறிமுகம்

டாடாவின் மெகா லான்ச் ஒரே நாளில் 17 லாரிகள் அறிமுகம்

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 7 முதல் 55 டன் பிரிவில், ஐந்து மின்சார லாரிகள் உட்பட, 17 லாரிகளை ஒரே நாளில் அறிமுகம் செய்துள்ளது. இவை, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் லாரிகள் ஆகும். இந்த லாரிகள், கட்டுமான, சுரங்க பணிகளுக்காக உருவாக்கப்பட்டவை. 'அஜூரா' சீரிஸ் இந்த புதிய வகை லாரி, 7 முதல் 19 டன் நடுரக எடை பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 3.6 லிட்டர் டீசல் இன்ஜின் கிடைக்கிறது. டிரைவர் சோர்வடையாமல் இருக்க, ரிக்லைன் சீட்கள், அதிக உட்புற இட வசதியுடன் வந்துள்ளது. இ - வணிகம், விவசாயம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தலாம். டிரைவர்கள் பாதுகாப்பு கருதி, ஐரோப்பிய விபத்து பாதுகாப்பு தர நிலைகளுக்கேற்ப, அனைத்து லாரிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், 23 'அடாஸ்' பாதுகாப்பு வசதிகளும் அடங்கும். இந்த டீசல் லாரிகள், 1.8 டன் கூடுதல் எடையை சுமக்க முடியும். இ.வி., சீரிஸ் (ரேஞ்ச் 150 - 450 கி.மீ.,) பிரைமா இ.55எஸ் பிரைமா இ.28கே அல்ட்ரா இ.வி., இ.7 அல்ட்ரா இ.9 அல்ட்ரா இ.12டீ டீசல் சீரிஸ் அஜூரா பிரைமா சிக்னா அல்ட்ரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை