மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
'டொயோட்டா' நிறுவனம், அதன் 9ம் தலைமுறை 'கேம்ரீ' செடான் காரை டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இம்முறை புதிய டிசைனில், கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வருகிறது. பழைய 'டி.என்.ஜி.ஏ., - கே' தளத்தில் கட்டமைக்கப்படும் இந்த காரின் வெளிப்புற தோற்றம் லெக்சஸ் காரை போன்று ஆடம்பரமாக உள்ளது. இதில், அதே 2.5 லிட்டர், ஹைபிரிட் இன்ஜின் மற்றும் 'இ - சி.வி.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை, இந்த காரின் மைலேஜ் 6 கி.மீ., அதிகரிக்கப் பட்டு, 25 கி.மீ., வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கார், பெங்களூரில் உள்ள டொயோட்டாவின் பிடாடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் வினியோகம் குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
26-Nov-2024