உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரை காப்பாற்றுமா?

ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரை காப்பாற்றுமா?

'ஹோண்டா ஸ்கூட்டர்ஸ்' நிறுவனம், ஆக்டிவா-இ என்ற அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டரில், இரு 1.5 கி.வாட்.ஹார்., பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே சார்ஜில், 102 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். ஆனால், இதை உரிமையாளர்கள் சார்ஜ் செய்ய முடியாது, பேட்டரி பரிமாற்றம் முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஹோண்டாவின் பிரத்யேக பேட்டரி பரிமாற்றம் நிலையங்களில் இதை செய்து கொள்ளலாம்.இரு பேட்டரிகள் இருப்பதால், பூட் ஸ்பேஸ் மிக குறைவாக உள்ளது. முதற்கட்டமாக, பெங்களூரு, மும்பை மற்றும் புதுடில்லியில் பேட்டரி பரிமாற்றம் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.அம்சங்களை பொறுத்தவரையில் 171 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 160 எம்.எம்., முன்புற டிஸ்க் மற்றும் 130 எம்.எம்., பின்புற டிரம் பிரேக், 12 அங்குல அலாய் சக்கரங்கள், எல்.இ.டி., லைட்டுகள், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோடுகள், நேவிகேஷன் அமைப்பு ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு, ஜனவரி 1 முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் வினியோகம், பிப்ரவரி கடைசி முதல் துவங்குகிறது. இதன் விலை ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.

விபரக்குறிப்பு

பேட்டரி இரு 1.5 கி.வாட்.ஹார்., இரு பேட்டரிகள்மோட்டார் பவர் 8 ஹெச்.பி.,டார்க் 22 என்.எம்.,ரேஞ்ச் 102 கி.மீ.,(0 - 60 கி.மீ.,) பிக்கப் 7.3 வினாடிஎடை 118 கிலோ

டீலர்:

KUN honda - 98840 14555Didar Honda 98407 90781


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 05, 2024 12:58

இந்திய தயாரிப்புன்னு லாவா ஃபோன் இண்ணு வாங்கினேன். படு மோசம். போன் அப்பப்போ சைலண்ட் ஆயிடும். அந்த போனில் ட்யூராஸ்பீடு ந்னு ஒரு தத்தி ஆப். அது என்ன செய்யுதுன்னு அவிங்களுக்கே தெரியாது. நாம வாட்சப்புல பேசுனா அது பூந்து கட் பண்ணுது. அந்த எழவு ஆப் வாணாம்னு பாத்தா டிலீட் பண்ணவும் முடியாது. இவிங்களை வெச்சிக்கிட்டு வல்லரசாக இன்னும் நுய்று வருசம் ஆகும்.


Santhakumar Srinivasalu
டிச 04, 2024 21:12

பாட்டரிய வண்டிய சார்ஜ் செய்யும் உரிமை வாங்கிறவங்களுக்கு கொடுக்கிறது தான் ஞாயம். இல்லையேல் வண்டி வியாபரம் பாதிக்கும்.


அப்பாவி
டிச 04, 2024 13:37

அவன் ஜப்பான் காரன். குவாலிட்டியா பொருள் குடுப்பான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை