மூட்டுக்களை பாதுகாக்க 30 மில்லி ரத்தம் போதும்!
முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு, குருத்தெலும்பிற்கு மாற்றாக உலோகத் தகடு பொருத்தும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதற்கு 'நீ ரீப்ளேஸ்மென்ட்' என்று பெயர்.தற்போது அறுவை சிகிச்சை இல்லாமல், குருத்தெலும்பை வளர வைக்க, ஸ்டெம் செல் சிகிச்சை, பி.ஆர்.பி., போன்ற நவீன சிகிச்சைகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்கிறோம்.பி.ஆர்.பி., சிகிச்சைஉடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும் சிதைந்த திசுக்களை இயற்கையாக சரி செய்வதற்கு உடல் முயற்சி செய்யும். அதற்கு ஸ்டெம் செல்கள் உள்ள தட்டணுக்கள் நிறைந்த ரத்தம் அதிக அளவில் அந்த இடத்திற்கு செல்லும். இது சிதைந்த திசுக்களை சரி செய்யும்.இந்த முறையில் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒரு மூட்டிற்கு 30 மில்லி ரத்தம் எடுப்போம். அதில் உள்ள ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து, ஊசி மூலம் தேய்மானம் உள்ள மூட்டில் செலுத்துவோம். ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை முடிந்து விடும்.நடந்தே வீட்டிற்கு செல்லலாம்; இயல்பாக வேலைகளை செய்யலாம். மருத்துவமனையில் தங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. தேய்ந்த குருத்தெலும்பு அடுத்த மூன்று மாதத்தில் வளர்ந்து விடும்.அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எந்த பிரச்னையும் வராது. அதன் பின் மீண்டும் தேய்ந்தால், இதே சிகிச்சையை செய்து கொள்ளலாம்.முழங்கால் மூட்டு என்றில்லை; தோள்பட்டை, கழுத்து, இடுப்பு மூட்டு என்று எந்த மூட்டில் என்ன தொந்தரவு ஏற்பட்டாலும், ஆரம்ப நிலையில் இந்த சிகிச்சை நல்ல பலன் தரும். குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்து விட்டால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு.ஸ்டெம் செல்ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பில் ஸ்டெம் செல்கள் உள்ளன. கொழுப்பில் அதிக எண்ணிக்கைஸ்டெம் செல்கள் இருக்கும். 30 மில்லி ரத்தத்தில் 100 கோடி செல்கள் இருந்தால், கொழுப்பில் 10 கோடி இருக்கும். தோல் சிகிச்சை, சர்க்கரை கோளாறால் காலில் ஏற்படும் புண் இவற்றிற்கும் பி.ஆர்.பி., சிகிச்சை பலன் தரும்.ஸ்டெம் செல்களை கணையத்தில் நேரடியாக செலுத்தி, இன்சுலினை சுரக்கவைக்கும் ஆராய்ச்சி வெற்றிகரமாக விலங்குகளிடம் முடிந்து, தற்போது மனிதர்களிடம் செய்யப்படுகிறது.வெற்றி பெற்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஊசி செலுத்தினாலே போதும். வாழ்க்கை முழுவதும் மருந்தை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.டாக்டர் எம்.லட்சுமிநாதன்,எலும்பு, மூட்டு பாதுகாப்பு சிறப்பு மருத்தவ ஆலோசகர்,ரீகன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்த்தோபீடிகஸ், சென்னை98844 88288