உள்ளூர் செய்திகள்

பெரிய வெங்காயம் 40 கலோரி; பொரித்த வெங்காயம் 400 கலோரி!

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணம், அதிகப்படியான கொழுப்பு. இந்திய உணவுகளில், கரையக் கூடிய நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. ஆனால், வறுத்து, பொரிக்கும் போது, இந்த கொழுப்பு கரையாத, நிறைவுறாத கொழுப்பாக மாறி விடுகிறது. இது தான் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்கு மிக முக்கிய காரணம். உதாரணமாக, சமைக்காத ஒரு பெரிய முழு வெங்காயத்தில், 40 கலோரிகள் உள்ளன. இதை எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது, 400 கலோரியாகி விடும்.அதே போல, தினசரி காலை உணவுக்கு முட்டை சாப்பிட விரும்பினால், வறுத்த, பொரித்த முட்டையை தவிர்த்து, அவித்த முட்டையில், புரதம் மிகுந்த வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடலாம். மேற்கத்திய நாடுகளைப் போல இல்லாமல், இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்கள் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே சாப்பிடுகின்றனர்; அதனால் பிரச்னை பெரிதாக வராது.தினசரி 50 கிராம் 'நட்ஸ்' சாப்பிடுவது, இதயத்திற்கு மட்டுமல்ல; கண்கள், தோல், தலைமுடி ஆரோக்கியத்தில் வியப்பான மாற்றங்களைத் தரும்.வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய் அளவில், 50 சதவீதத்தை குறைக்க பழகினாலே, அதிக கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்கலாம்.- அமெரிக்கன் ஹார்ட் சொசைட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !