உள்ளூர் செய்திகள்

டாக்டரின் டைரி குறிப்பு

ஜூன் 1, 2016: கண்ணதாசனுக்கு வயது ௫௩ ஆகிறது. ஓராண்டுக்கு முன், மனைவி இறந்துவிட்டார். மகன், மருமகள், பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார். மனைவி இறந்த பிறகு, வாழ்வே இருண்டுவிட்டது போன்ற உணர்வு. மனைவியின் இழப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, நீரிழிவு நோய்க்கு ஆளாகிவிட்டார். சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக என்னிடம் வந்தார். தவறாமல் ஆலோசனைக்கு வந்துவிடுவார். ஆனால், தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறாரா என்ற சந்தேகம் இருந்தது. மறுமுறை என்னை சந்திக்க வந்தபோது, சில நாட்கள் மட்டும் நீரிழிவிற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதாக கூறினார். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக, உணவுக்கு முன்பும், சாப்பிட்ட ௨ மணி நேரம் கழித்தும், ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தேன். அதில், உணவுக்கு முன் ரத்த சர்க்கரையின் அளவு ஒரு டெசி லிட்டருக்கு, ௧௧௦ மி.கி., அளவும், உணவுக்கு பின் ஒரு டெசி லிட்டருக்கு, ௧௫௬ மி.கி., அளவும் இருந்தது. பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவுக்கு முன், ௧௦௦ முதல் ௧௨௦, உணவுக்கு பின் ௧௪௦ முதல் ௧௬௦ என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கடந்த மூன்று மாதங்களாக சீராக உள்ளதா என்பதை அறிய HbA1c எனும் பரிசோதனை செய்யச் சொன்னேன். அதில் அவருக்கு, ௧௦ என்ற அளவு வந்திருந்தது. அப்படியென்றால், கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ௨௩௦க்கு மேல் இருந்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் இந்தன் அளவை, ௭ என நிர்ணயித்து இருக்கிறது. இந்த பரிசோதனையை செய்யவில்லை என்றால், பழைய மருந்துகளையே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பேன். ஆனால் கடந்த, ௩ மாதங்களாக, ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால், மருந்துகளை மாற்றித் தந்தேன். இது குறித்து, கண்ண தாசனிடம் கேட்டபோது, மிகவும் வருத்தத்தோடு கூறியது. ஒரு மனைவி, கணவனுக்கு கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை, அவனுக்கு முன்பே அவள் இறப்பது தான். மனைவி இருந்திருந்தால் தவறாமல் நினைவுபடுத்திருப்பார். நானும் தவறவிட்டிருக்க மாட்டேன் என்றார் சோகமாக. கே.பரணீதரன்பொது நலம் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர்.குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை98411 13009


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !