தொற்றை குறைக்கும் வைட்டமின் - டி!
கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோருக்கு, 'வைட்டமின் - டி' பற்றாக்குறை இருந்தது தெரிய வந்துள்ளது.தீவிர பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களுக்கு, வைட்டமின் - டி அளவு, 1 மில்லி கிராமில், 20 நானோ கிராமிற்கும் குறைவாக இருந்தது. இவர்கள், மற்றவர்களை விட, 14 சதவீதம் அதிக ஆபத்தான நிலையில் இருந்தனர். ஒரு தனிநபரின் வைட்டமின் - டி அளவு, 20 நானோ கிராம் இருக்க வேண்டும். சிறிது குறைந்தாலும் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் என்றால், இது போன்ற தொற்று பரவல் அதிகமான நேரத்தில், வைட்டமின் - டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆதாரம்: கலிலீ மருத்துவ மையம், இஸ்ரேல்.