உள்ளூர் செய்திகள்

ரத்த சர்க்கரை அளவை ஆயுர்வேத மருந்துகள் குறைக்குமா?

சர்க்கரை கோளாறுக்கு அலோபதி மருந்துகளுடன் சேர்த்து ஆயுர்வேத மருந்துகளும் சாப்பிடலாமா என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தனி நபரின் உடல் தன்மை அடிப்படையிலான விஷயம். எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிட விரும்புபவர்கள், இரு தரப்பு மருத்துவரின் ஆலோசனைகளையும் கேட்ட பின்னரே மருந்துகளை சாப்பிட வேண்டும்.ஆயுர்வேத மருந்துகள் என்பது வெறும் மூலிகைகள் மட்டும் கிடையாது; மூலிகையுடன் சில தாதுக்களையும் சேர்த்து செய்யப்படுவதாகும். பல வகை மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இதை, 'ஹெர்போ மினரல் மெடிசின்' என்று சொல்லுவோம்.வெகு சிலர் தான் டாக்டர் சொன்ன நாளில் பரிசோதனை செய்து, டாக்டர் பரிந்துரை செய்தபடி, மருந்துகளை கூட்டியோ குறைத்தோ சாப்பிடுகின்றனர். ஒரு முறை டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி வந்து, ஆண்டுக்கணக்கில் அதையே சாப்பிடுகின்றனர். எனக்கு தெரிந்த ஒரு சிலர் ஏழெட்டு ஆண்டுகளாக ஒரே மருந்தை ரத்த சர்க்கரை பரிசோதனை எதுவும் செய்யாமல் தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.ஆயுர்வேத மருந்து தானே, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம், பக்க விளைவுகள் இருக்காது என்று நினைக்கக் கூடாது. 'டைப் - 2' சர்க்கரை கோளாறு ஆரம்ப நிலையில் இருந்தால், ஆயுர்வேத மருந்துகள் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பெருமளவு உதவுகிறது.இரண்டு மருந்தையும் சேர்த்து சாப்பிடுபவர்கள், முதலில் அலோபதி மருந்து சாப்பிட ஆரம்பித்தவர்கள், அதன்பின் ஆயுர்வேத மருந்தும் சாப்பிட்டு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று டாக்டரின் ஆலோசனையை முறையாக பின்பற்றினால், படிப்படியாக மருந்தின் அளவை குறைப்பதும் சாத்தியமாகி உள்ளது.டாக்டர் எம். ஹரிகிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர், ஸ்ரீராஜசியாமளா ஆயுர்வேத வைத்தியசாலா, சென்னை89399 33150ealthhari@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்