உள்ளூர் செய்திகள்

மாரடைப்பு வந்தோர் மாடிப்படி ஏறலாமா?

ஆர்.சிவசக்தி, மதுரை: எனக்கு ஒரு ஆண்டுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, தற்போது நலமுடன் உள்ளேன். என் வீடு 2வது மாடியில் உள்ளது. தினமும் படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும். நான் என்ன செய்வது?மாரடைப்பு வந்தவர்களுக்கு அவசியம், ரத்தம், எக்கோ, டிரெட் மில், ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவை அனைத்தின் முடிவும் நார்மலாக இருந்தால், தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சில மருந்து, மாத்திரைகளை எடுக்க வேண்டி வரும். சரியான உணவுப் பழக்கம், மனதை நிம்மதியாக வைத்து இருப்பது, தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாது மருந்து எடுப்பது முக்கியம். அனைத்து பரிசோதனைகள் முடிவும் நார்மலாக இருந்தால் மாடிப்படிகளில் தாராளமாக ஏறி, இறங்கலாம். இருந்தாலும் மெதுவாக சில படிகள் ஏறிநின்று, நிதானமாக செல்வது நல்ல பழக்கமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்