கேன்சரை உண்டாக்கும் சானிடரி நாப்கின்!
மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின், 'டேம்பன்' என்னும் திரவத்தை உறிஞ்சும் பருத்தி குச்சி போன்ற தயாரிப்புகளை பயன்படுத்துவது சுலபம். இதனால், பல உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றன.நாப்கின்கள், டேம்பன் போன்றவை பருத்தி பஞ்சுகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பருத்தி சாகுபடியின் போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், தோலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். சில நிறுவனங்கள் துாய்மையான வெள்ளை நிறத்தில் நாப்கின்களை விற்பனை செய்கின்றன. இவற்றில், துாய்மையைக் கொண்டு வருவதற்காக, 'ப்ளீச்சிங்' பயன்படுத்துகின்றன. ஒருவித ரசாயனம்இவை தவிர, சானிடரி நாப்கின்களில், 'பித்தலேட்டு'கள் ஆவியாகும் கரிம கலவைகள் ஆகியவையும் உள்ளன. 'பிளாஸ்டிக்' பொருட்களின் நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் ஒருவித ரசாயனம் தான், பித்தலேட்டுகள்.ஆவியாகும் கரிம கலவைகள், பெயின்ட், தரை விரிப்புகள், பசைகள், நுரை, 'ஏர் பிரஷ்னர்' சுத்தம் செய்யும் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.மிகவும் மென்மையான சவ்வுகளை கொண்ட பெண்களின் பிறப்புறுப்பில், இது போன்ற ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளை உபயோகிக்கும் போது, அவற்றில் உள்ள ரசாயனங்கள் உறிஞ்சப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கர்ப்பப்பை வாய், கருப்பை, தோல் புற்று நோய் உட்பட பல்வேறு வகையான கேன்சர் ஏற்படலாம். எனவே, இது போன்ற நாப்கின்களை பயன்படுத்துவதை விட, பூச்சிக்கொல்லி, ப்ளீச் இல்லாத 'ஆர்கானிக் நாப்கின்'களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.பாக்டீரியாக்கள் அபாயம்நாப்கின்களைக் காட்டிலும், டேம்பன்களை பயன்படுத்துவது மிகவும் எளிதானது; ஆனால், இதை அதிக நேரம் பிறப்புறுப்பு பகுதியில் வைத்திருக்கும் போது, 'டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' என்னும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இதன் அறிகுறிகள், அதீத காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், வாந்தி, உறுப்பு செயலிழப்பு, விரைவான சுவாசம், தலைவலி, சிறுநீர் உற்பத்தியின்மை, மனக் குழப்பம் போன்றவை.டேம்பன்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் நோய் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், நீங்கள் நாப்கின் பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்வது அவசியம்.இதற்கு மாற்றாக, 'சிலிக்கான்' கொண்டு தயாரித்த, பாரம்பரிய தயாரிப்புகளை பயன்படுத்தினால், பாதிப்பு குறையும். நச்சு ரசாயனங்கள் எதுவும் இல்லை; அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகும். அவற்றை உடனுக்குடன் துாக்கி எறியத் தேவையில்லை. அதற்கு பதிலாக, நாம் அவற்றை துவைத்து, சுத்தப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தலாம். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைவதோடு, அதை அவர்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.டாக்டர் ஸ்பூர்த்தி அருண், புரோமெட் மருத்துவமனை உள் மருத்துவ பிரிவு,சென்னை.95000 77678