உடல் வளர்ச்சிக்குஉலர் திராட்சை
உலர் திராட்சையை உண்டால் சாப்பிடும் பலன்கள் ஏராளம். உடல் பலவீனமானவர்களுக்கு, இது வரப்பிரசாதம்.முக்கியமாக, வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதி பெறவும், பற்கள் வலு பெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. உலர் திராட்சை, தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பழத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலு பெறும்.தொண்டைக்கட்டு ஏற்பட்டவர்கள், பால் காய்ச்சும் போது மிளகுத்தூள், உலர் திராட்சையை போட்டு பருகலாம். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை சேர்த்து தண்ணீர் விட்டு, காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும். கர்ப்பிணிகள் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். தினமும், 10 உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை காண முடியும்.மலச்சிக்கலால் சிரமப்படும் வயதானோர் மட்டுமல்ல, இளம் வயதினரும், இரவில் பத்து உலர் திராட்சையை சாப்பிட்டு படுத்தால், மறுநாள் மலச்சிக்கல் என்ற பிரச்னையே இருக்காது.மருத்துவமனையில் நீண்ட நாட்கள் படுத்திருந்து மீண்டு வருபவர்கள், மீண்டும் தங்கள் இழந்த ஆ@ராக்கியத்தை பெற, உலர் திராட்சைகளை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். பள்ளி செல்லும் குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தால், சிறிது உலர் திராட்சை போதும். மதிய உணவு வரை சக்திபெற அவர்களுக்கு உதவும்.