பக்க விளைவுகள் அதிகம் இல்லாத கீமோ தெரபி, டிரான்ஸ்-ஆர்டரியல்
கல்லீரல் கேன்சர் பாதிப்பு, அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகம் உள்ள 10 நாடுகளில் நம் நாடும் ஒன்று.கல்லீரல் கேன்சர் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது என்பதால், 70 - 80 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர்.கல்லீரல் கேன்சரில் பல்வேறு வகைகள் உள்ளன, அவற்றில் 'ஹெபடோசெல்லுலர் கார்சினோமா' மிகவும் பொதுவானது. ஏற்கனவே கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு, சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செயலிழப்பு, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற சில வைரஸ் தொற்றுகள், அதிக உடல் எடை, மது பழக்கம், மரபணு நோய்கள் காரணமாக இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மரபியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.ஆரம்ப நிலையில் இதை கவனிக்காவிட்டால் கல்லீரல் கேன்சராக மாறும் வாய்ப்பு உள்ளது. கல்லீரல் கேன்சரை ஆரம்ப நிலையில் கண்டறிய ஒரே வழி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் செய்வது தான்.கல்லீரல் கேன்சர் மிகவும் ஆபத்தானது என்று உலக அளவில் தவறான தகவல் உள்ளது.ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் கட்டியை அகற்றலாம். முடியாத நிலையில்,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முழுமையாக தீர்வைத் தரும்.அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில், ரேடியோ அதிர்வெண் நீக்கம், நுண்ணலை நீக்கம், கிரையோதெரபி மூலம் கேன்சர் கட்டிகளை நீக்கலாம்.கல்லீரல் கேன்சர் சிகிச்சையில் பக்க விளைவுகள் அதிகம் இல்லாத கீமோதெரபி மருந்தை நேரடியாக ரத்த நாளத்தில் செலுத்தி, கேன்சர் கட்டியில் கதிர்வீச்சு, டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் செலுத்துவது போன்ற புதிய முறைகள் தற்போது நடைமுறையில் உள்ன.டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் நடைமுறையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யட்ரியம் எனும் மருந்து கட்டிக்குள் செலுத்தப்படுகிறது.இதிலிருந்து வெளிப்படும் பீட்டா கதிர்கள், கட்டியை மெதுவாக அழிக்கும்.இத்துடன், குறைவான பக்க விளைவுகளுடன் கேன்சர் செல்களை அழிக்கும்.பல புதிய வாய்வழி மருந்துகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதுதவிர, இம்யூனோதெரபி எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கேன்சர் செல்களை அழிக்கும் சிகிச்சையும் சமீபகாலமாக ஒரு பெரிய திருப்புமுனையாக உள்ளது.டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல், பித்தப்பை சிகிச்சை பிரிவு இயக்குனர், கிளெனீகல்ஸ் மருத்துவமனை, சென்னை79967 89196info.chn@gleneagleshospitals.co.in