குழந்தைகளின் உணவில் வைரஸ் இருக்கலாம்!
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும், 30 லட்சம் பேர், 'ஹெப்படைடிஸ் - ஏ' வைரஸ் தொற்றாலும், 15 லட்சம் பேர், 'ஹெப்படைடிஸ் - பி' வைரஸ் தொற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். ஹெப்படைடிஸ் - ஏ பாதிப்பு ஏற்பட்டால், கல்லீரலில் தீவிர வைரஸ் தொற்றையும், ஹெப்படைடிஸ் - பி பாதிப்பு இருந்தால், வைரஸ் தொற்றுடன் சேர்ந்து, நாள்பட்ட கல்லீரல் நோய், 'சிரோசிஸ்' எனப்படும் கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் கேன்சரை ஏற்படுத்துகிறது. இரண்டு வைரஸ் தொற்றும் வராமல் தடுப்பதற்கு, பாதுகாப்பான தடுப்பு மருந்துகள் உள்ளன.கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள இன்றைய நிலையில், கொரோனாவைப் போலவே, ஹெப்படைடிஸ் வைரசும் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு வரும் பலருக்கு, ஹெப்படைடிஸ் - ஏ, பி வைரசின் தாக்கமும் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.ஹெப்படைடிஸ் - ஏ என்றால் என்ன?கல்லீரலை பாதிக்கும் அதிதீவிர வைரஸ் தொற்று இது. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாகப் பரவக் கூடியது. கல்லீரலில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தி, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையும் வரலாம்; சமயங்களில் இறப்பையும் ஏற்படுத்தும்.ஹெப்படைடிஸ் - பிகல்லீரலை பாதித்து நாள்பட்ட நோய்களான சிரோசிஸ், கேன்சர் போன்றவற்றை உண்டாக்கும் அபாயகரமான வைரஸ் தொற்று இது.ஹெப்படைடிஸ் - ஏ, பி வைரஸ் எப்படி பரவுகிறது?ஹெப்படைடிஸ் - ஏ சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், அசுத்தமான கழிப்பறை, சுத்தம் செய்யாத கைகளை வாயில் வைப்பது, சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படும் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள், கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தயார் செய்யும் உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாக என்று, பல விதங்களிலும் பரவுகிறது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம், பர்கர் போன்ற உணவுகளை வெளியிடங்களில் வாங்கித் தரும் போது, அவற்றிலும் இந்த வைரஸ் இருக்கலாம்.ஹெப்படைடிஸ் - பிரத்தம், எச்சில் போன்ற உடல் திரவங்கள் வாயிலாக, தொற்று பாதித்தவர் பயன்படுத்திய ஊசி மூலமாக, பாலியல் உறவு, தாய் - சேய் இணைப்பு திசுவழியாக, பாதித்த தாயிடம் இருந்து குழந்தைக்கு, சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவதாலும் பரவும்.ஹெப்படைடிஸ் - ஏ வைரஸ் பரவும் விதமும், தொற்றின் வீரியமும் தீவிரமாக இருப்பது ஏன்?எந்த சூழலிலும் தன்னை தற்காத்துக் கொண்டு வளரும் வலிமை பெற்றது, இவ்வகை வைரஸ். நீர் மூலம் வேகமாக பரவக் கூடியது.உப்புத் தன்மை மிகுந்த கடல் நீரிலும், பல வாரங்கள் இதனால் உயிர் வாழ முடியும். உறை நிலையிலும் இதை அழிக்க இயலாது. எனவே தான் சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் எளிதாக தொற்றி விடும்.ஹெப்படைடிஸ் - ஏ வைரஸ் தொற்று பாதிப்பு எப்படி இருக்கும்?இவ்வகை வைரஸ் தொற்றால், பல நாட்களுக்கு எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. பொதுவான அறிகுறிகளான, காய்ச்சல், வாந்தி, குமட்டல், பசியின்மை, மயக்கம், வயிற்றில் அசவுகரியம், அடர் நிறத்தில் சிறுநீர், மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருக்கலாம். முதியவர்கள், கர்ப்பிணியருக்கு தீவிர அறிகுறிகள் தெரியலாம்.மற்ற வைரஸ் பாதிப்புகள், 'பேட்டி லிவர்' எனப்படும் கல்லீரலில் கொழுப்பு சேருவது, மது பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, ஹெப்படைடிஸ் - ஏ பாதிப்பு வந்தால், நோய் தொற்று நீண்ட நாட்களுக்கு இருக்கும். குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், அறிகுறிகள் தெரியாது; ஆனால், அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளன. இந்த வைரசின் பாதிப்பு மூன்று வாரங்களில் இருந்து, மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கும்.ஹெப்படைடிஸ் - பிஏ வைரஸ் அறிகுறிகள் போன்றே இதற்கும் இருக்கும்; பல சமயங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். 10 சதவீதம் பேருக்கு சிரோசிஸ், கேன்சர் போன்ற தீவிர கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ரத்த பரிசோதனை மூலம் நோய் கிருமி பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.ஹெப்படைடிஸ் - ஏ, பி பாதிக்கும் அபாயம் யாருக்கு அதிகம் உள்ளது?ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுபவர்கள், வளரும் அல்லது வளர்ந்த நாடுகளுக்கு அதிக அளவில் பயணம் செய்பவர்கள், போதை பழக்கம் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், தடுப்பு மருந்து போடாதவர்கள், துாய்மை பணியாளர்கள் போன்றவர்களுக்கு, வைரஸ் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது.ஹெப்படைடிஸ் - பிஇந்த வைரஸ் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும், நோயால் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் உறவு கொள்பவருக்கு, ஒன்றுக்கு அதிகமானவர்களுடன் பாலியல் உறவில் இருப்பது, ஓரின சேர்க்கை பழக்கம், பரிசோதனைக் கூட ஊழியர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் ஒரே வீட்டில் வாழ்வது, மருத்துவ பணியாளர்கள், நோய் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்வது போன்றவை, நோய் தொற்றும் காரணிகள்.வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?ஹெப்படைடிஸ் - ஏஎப்போதும் சுத்தமான கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின், கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். உணவு தயாரிக்கும் போதும், சாப்பிடும் முன்னும், கைகளை சுத்தம் செய்த பின்பே, உணவை தொட வேண்டும்.ஹெப்படைடிஸ் - பிஷேவிங் ரேசர், டூத் பிரஷ், துண்டு போன்ற சுய உபயோக பொருட்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே கூடாது. அழகு நிலையங்கள், சலுான் போன்றவற்றில் ஒரு முறை பயன்படுத்திய பொருட்களை, மீண்டும் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.தடுப்பு மருந்து பாதுகாப்பைத் தருமா?இதற்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்டால், வைரஸ் உடலினுள் நுழையும் போது, அதற்கு எதிரான எதிர்ப்பணுக்களை நம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வைரசை அழித்து விடும்.ஏதாவது ஒரு வைரசிற்கு மட்டுமே தடுப்பு மருந்து போடுவது, இன்னொரு வகை தொற்றில் இருந்து பாதுகாப்பு தராது.டாக்டர் என்.தினகரன்,ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்.முன்னாள் பேராசிரியர்,ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை.98411 51599