தென் ஆசியர்களின் கொரோனா மரபணு!
கொரோனா பாதிப்பு சிலருக்கு அதிதீவிரமாக இருப்பதற்கு காரணம், 'எல்இசட்டிஎப்எல்- - 1' என்ற மரபணு. இந்த மரபணு தெற்காசிய வம்சாவளியினருக்கு பரவலாகவும், ஐரோப்பிய வம்சாவளியில் வந்த குறிப்பிட்ட பிரிவினரில், 15 சதவீதம் பேருக்கும் இருக்கிறது.இதனால் தான் முதல், இரண்டாவது அலையில், இந்த இரண்டு பிரிவினர் மத்தியில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் இருந்தது. கொரோனா வைரஸ் உடலினுள் நுழைந்ததும், குறிப்பிட்ட இந்த மரபணு நுரையீரல் செல்களை அளவுக்கு அதிகமாக துாண்டி, செயலிழக்கச் செய்கிறது. இதனால் வைரசின் தாக்கம் அதிகரித்து, சுவாச பிரச்னைகள் வருகின்றன. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் இந்த மரபணு, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, கொரோனா சிகிச்சையில் தரப்படும் மருந்துகள் நன்கு பலன் தருகின்றன. தடுப்பு மருந்து செலுத்தும் போதும், குறிப்பிட்ட இந்த மரபணு செல்களை துாண்டாமல் இயல்பாக இருப்பதால், கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. -ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்