உள்ளூர் செய்திகள்

மார்பக கேன்சருக்கு டி எக்ஸ்கலேஷன் சிகிச்சை!

கேன்சர் என்று முடிவானதும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேன்சருக்கான சிகிச்சை அனைத்தையும் செய்தோம். தற்போது அப்படிச் செய்வதில்லை. தனி நபரின் தேவை, பாதிப்பு, எந்த அளவு மருந்து கொடுத்தால் போதுமானது என்பதையெல்லாம் பார்த்து, அதற்கேற்ப சிகிச்சை தருகிறோம். இதனால், மிகக் குறைந்த பக்க விளைவுகளுடன் நல்ல பலனைப் பார்க்கிறோம். 'டி எஸ்கலேஷன் ஆப் பிரஸ்ட் கேன்சர்' என்ற இந்த முறை தான் தற்போது மார்பக கேன்சர் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்.இதில், வழக்கமாக செய்யப்படும் பாதித்த மார்பகம், அதன் கீழ் உள்ள தசைகள், மார்பு பகுதி, அக்குளில் உள்ள நெறிகட்டிகளை முழுமையாக அகற்றுவதற்கு பதிலாக, எந்தப் பகுதியில் பாதிப்பு உள்ளதோ, அந்த இடத்தில் உள்ள கட்டி, தசைகளை அகற்றி, சிகிச்சைக்கு பின், 'ஆங்கோபிளாஸ்டி' சிகிச்சையில், மார்பகத்தின் பாதிக்காத பகுதியில் உள்ள திசுக்கள், உடலின் வேறு பகுதியில் உள்ள திசுக்களை வைத்து, மார்பகத்தை பழைய நிலைக்கு கொண்டு வருகிறோம்.இதனால் கேன்சர் பாதித்த சுவடே தெரியாமல், ஆரோக்கியமான மற்ற மார்பகம் போன்றே இருக்கும். மார்பக கேன்சர் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பாதிப்பின் தன்மையும் கட்டி உருவாவதற்கா ன காரணமும் நபருக்கு நபர் மாறுபடும்.ஈஆர் பிஆர் ஹெர்2 எனப்படும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாறுபாடு மற்றும் செல்களின் வளர்ச்சி வேகத்தைப் பொருத்து நபருக்கு நபர் சிகிச்சையும் மாறுபடும். 'ஹெர் 2 பாசிடிவ்' என்கிற ஹார்மோன் துாண்டுதலால் ஏற்படும் கேன்சர் செல்களை அழிக்க 'டார்கெட்டட் தெரபி' நல்ல பலன் தரும். பயாப்சி செய்து கட்டியின் தன்மை என்ன என்பதைப் பார்த்து, அதன்பின் தான் குறிப்பிட்ட நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, கீமோ முதலில் தர வேண்டுமா என்று முடிவு செய்வோம்.சில நோயாளிகள் ஆரம்ப நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு கட்டியில் உள்ள மரபணு மூலக்கூறுகளை பரிசோதனை செய்து, கீமோ தெரபி மருந்துகளால் கேன்சர் செல்களை அழிக்க முடியும் என்று தெரிந்தால் மட்டுமே கீமோ தருகிறோம்.மார்பக கேன்சரில் லுமினல் ஏ, லுமினல் பி, ட்ரிப்பிள் நெகடிவ் என்று பல வகைகள் உள்ளன. என்ன வகை என்று தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை தருவது தான் பலன் தரும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், என் பெயர் மஞ்சுளா. இதே இடத்தில் இன்னும் ஐந்து மஞ்சுளாக்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே சுபாவம், குணம், விருப்பு, வெறுப்புகளுடன் இருப்பதில்லை. நாம் வளர்ந்த சூழ்நிலையை பொருத்து மாறுபடும். அது போலவே ஒவ்வொருவருக்கு வரும் கேன்சர் கட்டியும் வித்தியாசமானது.டாக்டர் மஞ்சுளா ராவ், ஆங்கோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மருத்துவர், அப்போலோ புரோட்டான் கேன்சர் மையம், சென்னை73389 92222apcc@ap0llohospital.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்