உள்ளூர் செய்திகள்

"புகைப்பழக்கத்தை நிறுத்தியும் நம்ப மறுக்கும் டாக்டர்கள்

ஐம்பது வயதான நான், 20 ஆண்டுகள் புகைபிடித்தேன். கடந்த 3 ஆண்டுகளாக இப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன். சில நாட்களுக்கு முன் முழு உடல் பரிசோதனை செய்த போது, மருத்துவர் என்னை புகை பிடிப்பவராகவே குறிப்பிடுகிறார். இதற்கு என்ன காரணம்?நீங்கள் புகை பிடிப்பதை நிரந்தரமாக நிறுத்தினாலும், நுரையீரல் பழைய நிலைக்கு வர, 10 ஆண்டுகள் தேவைப்படும். அதன்பிறகே நுரையீரலை மருத்துவ ரீதியாக பார்த்து, 'புகைப்பவர் அல்ல' என, கூறப்படுவீர்கள். நீங்கள் மூன்று ஆண்டுகள் தான், புகைப்பதை நிறுத்தி இருக்கிறீர்கள். இன்னும் 7 ஆண்டுகளுக்கு நீங்கள், 'புகைபிடிப்பவர்' என்று தான் மருத்துவ ரீதியாக கருதப் படுவீர்கள்.என் குழந்தைக்கு 'அலர்ஜி' இருப்பதாகக் கூறிய டாக்டர், 'இன்ஹேலர்' தந்து சிகிச்சையை துவக்கினார். 'அதை எந்த வயதில் நிறுத்தலாம்?' என கேட்டதற்கு, 'குழந்தை வளர, வளர சரியாகி விடும்' என்கிறார். எந்த வயதில் அதை நிறுத்தலாம்?ஒரு குழந்தையின் நுரையீரல், 16 வயது வரை வளரும். நுரையீரல் வளர வளர, 90 சதவீத குழந்தைகளுக்கு, அலர்ஜி பிரச்னை மறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. பத்து சதவீத குழந்தைகளுக்கு, வளர்ந்த பின்பும் அலர்ஜி தொடரும். இன்றுவரை, எந்த வயதில் இந்த அலர்ஜி தொந்தரவு மறையும்? என்று எந்த அளவுகோலும் கிடையாது. இயற்கையாக இந்தப் பிரச்னை குணமாகும் வரை, மருந்துகளை தொடர்வது மிக நல்லது. அதிகமாக தண்ணீர் அருந்துவதற்கும், இளைப்புக்கும் சம்பந்தம் உள்ளதா? சிலநேரங்களில், அதிக தண்ணீர் அருந்தும்போது, தொண்டையில் இறுக்கம், இளைப்பு உருவாகிறதே ஏன்?நமது உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதே அளவு தண்ணீரும் அவசியம். தினமும், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் குடிக்கக் கூடாது. நாம் உணவு அருந்துவது போலத்தான், தண்ணீர் அருந்துவதும் இருக்க வேண்டும். நீர்அருந்துவதற்கும், இளைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் தொண்டையில் இறுக்கமும், இளைப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !